For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீதிபதி செல்லமேஸ்வர் ஓய்வு பெற்றார்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது குற்றம்சாட்டியவர்

சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் | நீதிபதி செல்லமேஸ்வர் இன்றுடன் ஓய்வு..வீடியோ

    டெல்லி: உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் இன்று ஓய்வு பெற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது புகார் தெரிவித்து செல்லமேஸ்வர் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தவர் நீதிபதி செல்லமேஸ்வர். இவர் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாவார்.

    Supreme court Senior justice Chellameshwar retiring today

    கடந்த ஜனவரி 12ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து புகார் தெரிவிக்க செய்தியாளர் சந்திப்பை கூட்டி சர்ச்சையை ஏற்படுத்தினார். உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வரர் உட்பட 4 நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

    வழக்குகள் ஒதுக்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது அவர்கள் புகார் தெரிவித்திருந்தனர். அப்போது செல்லமேஸ்வரர் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை காக்க வலியுறுத்தினார்.

    ஆதார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளிலும் செல்லமேஸ்வர் தீர்ப்பளித்துள்ளார். ஏழு ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றியுள்ள செல்லமேஸ்வரர் இன்று தமது 65வது பிறந்த நாளில் ஓய்வு பெற்றார்.

    English summary
    Supreme court Senior justice Chellameshwar retiring today. Chellameshwar was accusing CJI Deepak misra with three more judges last month January.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X