For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆபாச விளம்பரங்கள்... கூகுள், யாஹு, மைக்ரேசாப்ட் நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: பிரபல இணையதள தேடல் பொறிகளான கூகுள், யாஹு, மைக்ரேசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆபாச விளம்பரங்களை தங்களது இணையதளங்களில் வெளியிட்டு வருவதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை பட்டியலிட்டு மனு அளிக்கும்படி மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சாபு மேத்யூ என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், இணையதளங்களில் பாலியல் கருவிகள், மருத்துவமனைகள் போன்ற தகவல்கள் அடங்கிய விளம்பரங்களை கூகுள், யாஹு, மைக்ரோசாப்ட் போன்ற தேடுதல் இயந்திரங்களில் இலவசமாக காண முடிகிறது. இதை தடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

Supreme Court slams Google, Yahoo, Microsoft for showing sex determination ads

இந்த வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சந்திரா பந்த், அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இத்தகைய ஆபாச விளம்பரங்களை தொகுத்து வழங்கி வரும் கூகுள், யாஹு, மைக்ரேசாப்ட் உள்ளிட்ட தேடுதல் இயந்திரங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், ‘‘சட்டத்தை இந்த இணையதள நிறுவனங்கள் தொடர்ந்து மீறி வருகிறதா? இத்தகைய விளம்பரங்களை முற்றிலும் தடுக்க முடியாதா? விளம்பரம் என்ற பெயரில் வெளியாகும் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.

எனவே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு முக்கியமான தேடுதல் இயந்திர நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். அத்துடன் ஆபாச விளம்பரங்களை உடனடியாக எப்படி தடுத்து நிறுத்துவது என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டது. இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரும் 25-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கூகுள் இணையதளத்தில் தகவல்களைத் தேடுவோரின் அனுமதியில்லாமல் பாலியல் ஆபாசப் படங்கள் கொண்ட இணைய தளங்கள் தோன்றுவது குறித்து இணையதள வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.

English summary
Supreme Court has slammed Google, Yahoo and Microsoft for allowing advertisements related to showing sex determination advertisement their websites in clear violation of law.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X