For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹரியானா முன்னாள் முதல்வர் சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை.. உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது!

By Sakthi
Google Oneindia Tamil News

டெல்லி : ஆசிரியர் நியமன முறைகேட்டில் ஹரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறைதண்டனையை உச்சநீதிமன்றமும் உறுதி செய்து சவுதாலாவின் மேல்முறையீட்டு மனுவை டிஸ்மிஸ் செய்தது.

இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் சவுதாலா கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஹரியானா மாநில முதல்வராக பதவி வகித்தார். அப்போது கடந்த 2000 ஆம் ஆண்டில் அங்கு 3,206 இளநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

chautala

அந்த நியமனத்தில், போலி ஆவணங்கள் கொடுத்தும், ஆவணங்களை திருத்தியும் ஏராளமானோர் பணி நியமனம் செய்திருப்பது தெரியவந்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது.

இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடந்த 2008 ஆம் ஆண்டு சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதை விசாரித்த டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம், ஓம் பிரகாஷ் சவுதாலா உள்பட 53 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்ததோடு, அவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது.

இதைத்தொடர்ந்து 80 வயதான முன்னாள் முதல்வர் சவுதாலாவும் 54 வயதான அவரது மகன் அஜய் சவுதாலா உள்ளிட்டோர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சவுதாலா மற்றும் அவரது மகன் அஜய் சவுதாலா உள்ளிட்டோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், அவர்களுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்ததோடு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனையும் எதிர்த்து சவுதாலா மற்றும் அவரது மகன் அஜய் சவுதாலா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனு குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதிகள் எஃப்.எம்.ஐ. கலிபுல்லா, சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

அப்போது, ஆசிரியர் நியமன முறைகேட்டில் டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்து உத்தரவிட்டனர்.

இது போன்ற மனுக்களை ஏற்கவே கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 10 ஆண்டுகள் சிறை உறுதியானதையடுத்து, தனது உடல் நிலையைக் காரணம் காட்டி பரோல் பெற ஓம் பிரகாஷ் சவுதாலா தரப்பில் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
The Supreme Court on Monday dismissed the plea of former Haryana Chief Minister Om Prakash Chautala and others, challenging their conviction and award of 10-year jail term in the teachers' recruitment scam case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X