For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சஹாரா நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட் வார்னிங்!!

By Mathi
Google Oneindia Tamil News

Supreme Court warns Sahara of probe over source of Rs. 20,000 crore
டெல்லி: சஹாரா நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ. 22 ஆயிரம் கோடியை கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

சஹாரா குழுமம் விதிமுறைகளை மீறி பொதுமக்களிடம் பல்லாயிரம் கோடி ரூபாயை திரட்டியது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ22 ஆயிரம் கோடியை சஹாரா குழுமம் செலுத்தியாக வேண்டும். இந்த பணத்திற்கான உத்தரவாதம் குறித்து வரும் ஜனவரி 23ந் தேதி நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

அப்படி செய்யாது போனால் நாங்கள் விசாரணைக்கு உத்தரவிட நேரிடும். சிபிஐ மற்றும் கம்பெனிகள் துறை பதிவாளரையும் நாங்கள் அழைக்க நேரிடும். மேலும் சஹாரா நிறுவனத்தலைவர் சுப்ரதா ராய் நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவிட்டது என்று கடுமை காட்டியது உச்சநீதிமன்றம்.

இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணையை வரும் 28 ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

English summary
The Supreme Court on Thursday asked Sahara Group to reveal the source of the Rs. 20,000 crore that it claimed to have paid its investor
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X