For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீபாவளிக்கு “கார், பிளாட், நகை” போனஸ் – அசத்திய சூரத் வைர ஏற்றுமதி நிறுவனம்!

Google Oneindia Tamil News

சூரத்: சூரத்தில் தீபாவளியை முன்னிட்டு ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற வைர ஏற்றுமதி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கார், பிளாட் மற்றும் நகைகளை போனஸ் ஆக வழங்கி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் அந்த நிறுவனம், தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 1200 ஊழியர்களின் வாழ்வில் தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளிச்சத்தை ஏற்படுத்தி தந்துள்ளது.

Surat company gifts 424 cars, 207 flats to workers

கிட்டதட்ட இன்பக்கடலிலேயே மூழ்கிப் போகும் அளவிற்கு போனஸை வாரி இறைத்துள்ளனர் இந்நிறுவனத்தினர்.

எதுவேண்டுமோ எடுத்துக்கோ:

அந்நிறுவனத்தின் தலைவரான சாவ்ஜி தொலாக்கியா, தனது பணியாளர்களான கைவினைஞர்கள் மற்றும் பொறியாளர்களை அழைத்து கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை காண்பித்து அவர்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ள சொல்லி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

கார், நகை, பிளாட்!!:

ஊழியர்களின் விசுவாசமான பணிக்கு ஏற்ப அவர்களுக்கு மேற்கண்ட வாய்ப்பு வழங்கப்பட்டதில் 500 பேர் புதிய பியட் புன்டோ கார்களையும், 570 பேர் நகைகளையும், 207 பேர் அடுக்குமாடி குடியிருப்புகளையும் தேர்வு செய்தனர்.

மகிழ்ச்சியான தருணம்:

அப்போது பேசிய தொலாக்கியா, தனது கனவுகள் அனைத்தையும் ஊழியர்களே நனவாக்கியதாகவும், கைவினைஞர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கை அவர்கள் எட்டியதாகவும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

50 கோடி ஊக்கத்தொகை:

இந்த வருடம் மட்டும் அக்கம்பெனி ஊழியர்களுக்கு 50 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
This will be one Diwali that 1,201 employees of the Rs 6,000-crore Hare Krishna Exports in Surat will never forget.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X