For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொடுமை.. "நீ கொரோனாவை பரப்பிவிடுவாய்".. அரசு பெண் மருத்துவரை பக்கத்து வீட்டார் தாக்கிய அவலம்!

Google Oneindia Tamil News

சூரத்: கொரோனாவை பரப்பிவிடுவார் என நினைத்து குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பெண் மருத்துவரை பக்கத்து வீட்டுக்காரர் திட்டி, கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கல்யாணத்தை தள்ளி வைத்த டாக்டர்

    குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் டாக்டர் சஞ்சீவனி. இவர் பணியாற்றும் மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கொரோனா வார்டில் பணியாற்றாவிட்டாலும் சஞ்சீவனி, கொரோனா வைரஸை தங்கள் அபார்ட்மென்ட்டுக்கு தொற்றி விட்டுவிடுவாரோ என்ற அச்சம் அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கு இருந்தது.

    மோடிக்கு ட்வீட்

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த பெண் மருத்துவர் வீட்டின் பிரதான வாயில் முன்பு தடுத்து நிறுத்தப்பட்டு "நீங்கள் மருத்துவமனைக்கு செல்லக் கூடாது. மீறி சென்றால் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் என அக்கம்பக்கத்தினர் சஞ்சீவனியை மிரட்டியுள்ளனர். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த பெண் மருத்துவர் ட்வீட் போட்டார்.

    பெண் மருத்துவர்

    பெண் மருத்துவர்

    பின்னர் உள்ளூர் பாஜக எம்எல்ஏ தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி அந்த பெண் மருத்துவரை மாடிக்கு அழைத்து சென்று அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக அக்கம்பக்கத்தினர் கூறினர். மேலும் தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதால் அந்த கட்டடத்திற்கே அந்த பெண் மருத்துவர் பரப்பி விடுவார் என வசைபாடினர்.

    நாய்

    நாய்

    இதற்கெல்லாம் மருத்துவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதுகுறித்து அந்த மருத்துவர் கூறுகையில் மாடியில் என்னிடம் பேசிய அன்று மாலையே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. கடந்த ஞாயிற்றுக்கிழமை எனது நாயை அழைத்து கொண்டு வெளியே செல்ல முற்பட்டேன். அப்போது பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி என்னிடம் வந்து எனது நாய் அவரை கடித்துவிட்டதாக கூறி வம்பிழுத்தார்.

    துரத்திவிடுவதாக மிரட்டல்

    துரத்திவிடுவதாக மிரட்டல்

    உடனே நான் அதை வீடியோ எடுத்தேன். உடனே அவரது கணவர் என்னை கண்டபடி பேசி " நீ மருத்துவராக இருந்தால் என்ன இந்த வீட்டை விட்டே அடித்து துரத்திவிடுவேன் என மிரட்டினார். நான் கொரோனா வார்டில் பணியாற்றவில்லை என எவ்வளவு கூறியும் அவர்கள் கேட்கவில்லை. என்னை அடித்து தாக்கினர். எனக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அப்படியிருக்கும் போது நான் எப்படி அஜாக்கிரதையாக வைரஸை தொற்றி வர முடியும்?

    கைது

    கைது

    நான் வீட்டுக்கு வருவதற்கு முன்னர் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் வருகிறேன். எனக்கு எப்போவாவது உடம்பு சரியில்லை என்றாலும் வீட்டுக்கு வராமல் மருத்துவமனையில் என்னை தனிமைப்படுத்தி கொள்வேன். இவர்கள் யாருக்கும் நான் மருத்துவராக இருப்பதும், அரசு மருத்துவமனையில் பணியாற்றுவதும் பிடிக்கவில்லை என்றார். இதையடுத்து வீடியோ வைரலான நிலையில் சூரத் போலீஸார் தம்பதியை கைது செய்தனர்.

    English summary
    A Surat doctor was attacked by her next door neighbour for working in Government hospital which has Covid 19 ward.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X