For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூரத் தீ விபத்தில் மாணவர்கள் உட்பட 17 பேர் பரிதாப பலி... நரேந்திர மோடி இரங்கல்

Google Oneindia Tamil News

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்தவர்களி்ன் குடும்பங்களுக்கு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சூரத் நகரில் உள்ள சார்த்தனா பகுதியில், தனியார் டுட்டோரியல் மற்றும் வரைகலை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதன் 2-வது தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Surat Fire: Death toll in fire at at a coaching centre in Sarthana area rises to 17.

கட்டிடத்தில் சிக்கிக் கொண்ட மாணவர்கள், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, கண்ணாடி தடுப்புகளை உடைத்துக் கொண்டு, உயிர் பிழைக்க மாடியிலிருந்து கீழே குதித்தனர். இந்த சம்பவம் பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்தது.

இந்த தீ விபத்தில் சிக்கி மாணவர்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என சூரத் காவல் ஆணையர் சதீஷ்குமார் மிஸ்ரால தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி, தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

 பிரதமர் கனவில் மிதந்து சூடுபட்டுக் கொண்ட தலைவர்கள்... சத்தமில்லாமல் சாதித்த ஸ்டாலின்!! பிரதமர் கனவில் மிதந்து சூடுபட்டுக் கொண்ட தலைவர்கள்... சத்தமில்லாமல் சாதித்த ஸ்டாலின்!!

தீ விபத்தில் உயிரிழந்தவர்களி்ன் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நரேந்திர மோடி, தொடர்ந்து, சூரத் தீ விபத்து மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடையவும், குஜராத் அரசு மற்றும் உள்ளூர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கும்படி வலியுறுத்தியுள்ளார்.

English summary
Gujarat: A fire broke out on the second floor of a building in Sarthana area of Surat; 18 fire tenders at the spot
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X