For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரான சுர்ஜித் சிங் பர்னாலா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 91.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சண்டிகர்: சுர்ஜிர் சிங் பர்னாலா உடல்நலக்குறைவு காரணமாக சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மறைந்தார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சுர்ஜித் சிங் பர்னாலாலா, ஹரியானா மாநிலம் அடேலி பேக்பூரில் பிறந்தார். பள்ளி படிப்பை நாபாவில் முடித்தவுடன் லக்னோ சென்று லக்னோ பல்கலைக்கழகத்தில் 1946 ம் ஆண்டு சட்டம் பயின்றார்.

Surjit Singh Barnala passes away

அவர் 1942 ம் ஆண்டு லக்னோவில் இருந்தபோது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டார். 1967 ம் ஆண்டு பர்னாலாவில் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். அதே ஆண்டு பர்னாலா தொகுதியிலிருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தத்தொகுதி உறுப்பினராக 1999 ஆம் ஆண்டு வரை இருந்தார். 1969 ம் ஆண்டு பஞ்சாப் மாநில கல்வி அமைச்சரானார். அமிர்தசரஸிலிருக்கும் குரு நானக் தேவ் பல்கலைகழகம் அமைந்ததில் இவருடைய சேவை குறிப்பிடத்தக்கது.

1977 ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பிரான பர்னாலா, மொரார்ஜி தேசாய் தலைமையில் விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சரானார். 1985 ம் ஆண்டு சிரோமணி அகாலி தள் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பஞ்சாப் மாநில முதல்வரானார்.

1990 ம் ஆண்டு தமிழ்நாட்டு ஆளுநராக நியமிக்கப்பட்டார். ராஜ்யசபா உறுப்பினராக 1996 மற்றும் 1998 ம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு வேதிப்பொருட்கள், உரம் மற்றும் உணவுத்துறை அமைச்சரானார்.

இவர் உத்தராஞ்சல் மாதில ஆளுநராக 2000 முதல் 2004 வரையிலும், ஆந்திரப் பிரதேச ஆளுநராக 2003 முதல் 2004 வரையிலும் இருந்தார். 2004-2011ஆம் ஆண்டு வரை தமிழக ஆளுநராக பணியாற்றினார்.

இந்திய நாட்டு பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் அவை போன்ற அனைத்துலக நிறுவனங்களில் இடம் பெற்றிருந்தார். இவர் இயற்கையை ரசித்தல், ஓவியம் வரைதல், புத்தகம் படித்தல், எழுதுதல் மற்றும் பயணம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்.

English summary
Former TamilNadu governor Surjit Singh Barnala,passed away on Saturday in Chandigarh. He was 91.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X