For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹைதராபாத்தில் உலகின் மிகப்பெரிய டைனிங் ஹாலில் மோடியுடன் இவாங்காவிற்கு டின்னர்! மெனுவை பாருங்க

ஐதராபாத் வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் இரவு உணவு சாப்பிட உள்ளதையொட்டி சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஹைதராபாத்தில் உலகின் மிகப்பெரிய டைனிங் ஹாலில் மோடியுடன் இவாங்காவிற்கு டின்னர்!- வீடியோ

    ஐதராபாத் : இந்தியா வந்துள்ள அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் இரவு உணவு சாப்பிடுகிறார், அப்போது அவரை ஆச்சரியப்படுத்துவதற்காக ராயல் வரவேற்பு, 5 விதவிதமான மெனுக்கள் என தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    2017 சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் ஐதராபாத் வந்துள்ளார். வெள்ளை மாளிகையின் ஆலோசகராகவும் உள்ள இவாங்கா இன்ற இரவு பிரதமர் நரேந்திர மோடியுடன் இரவு உணவு சாப்பிடுகிறார்.

    அவருக்கு அளிக்கும் வரவேற்பு, டின்னரை மறக்க முடியாத அளவில் ஆச்சரியமளிப்பவையாக மாற்ற சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகிலேயே மிகப்பெரிய டைனிங் ஹாலான தாஜ் ஃபலக்நுமா அரண்மனையில் இவாங்கா இன்று இரவு உணவு சாப்பிடப் போகிறார்.

    சாரட் பயணம், ஆரத்தி

    சாரட் பயணம், ஆரத்தி

    அவருக்கு ராயல் வரவேற்பு கொடுக்கும வகையில், அரண்மனையின் முகப்பு கேட்டில் இருந்து மலை மேல் இருக்கும் அரண்மனை வரை குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து செல்லப்பட உள்ளார். அதன் பின்னர் பாரம்பரிய முறைப்படி ஆரத்தி மற்றும் குத்துவிளக்கேற்றும் நிகழ்வு நடைபெற உள்ளது.

    அரண்மனை வாசலுக்கு இவாங்கா வந்தவுடன் ரோஜா மலர்களைத் தூவி அவரை வியக்க வைக்கும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாம். அறை எண் 101ல் இவாங்கா டின்னர் சாப்பிட திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆடம்பர அறை

    ஆடம்பர அறை

    122 ஆண்டு பழமையான ராஜபரம்பரையின் ஆடம்பரங்களை இந்த அறை பிரதிபலிக்குமாம். ரோஸ்வுட், சந்தன மரக்கட்டைகளால் ஆன 101 இருக்கைகள் இந்த அறையில் அமைந்துள்ளன. ஐதராபாத் ராயல்களின் விருப்பமான இடமாகவும் இந்த டைனிங் ஹால் உள்ளது. நிஜாம் மன்னரின் பிரத்யேக சேகரிப்பு பொருட்களைக் கொண்டு உணவு பரிமாறும் மேஜைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    ஐதராபாத் ஸ்பெஷல்

    ஐதராபாத் ஸ்பெஷல்

    3 குழந்தைகளுக்குத் தாயான இவாங்கா தன்னுடைய ஆரோக்கியத்தில் மிகவும் அக்கறையானவர். எனினும் இன்று அவருக்கு பாரம்பரிய ஐதராபாத் உணவுகளின் ருசியால் திணறடிக்கச் செய்யும் விதமாக மெனுக்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. செஃப் சஜேஷ் நாயர் மற்றும் அவரது குழு இந்த உணவைத் தயாரிக்கின்றனர்.

    சிறப்பை விளக்கி பரிமாற ஆள்

    சிறப்பை விளக்கி பரிமாற ஆள்

    குங்குமப்பூ, அத்திப்பழம் உள்ளிட்ட அரிதான இந்தியப் பொருட்களைக் கொண்டு உணவு சமைக்கப்பட உள்ளது. இது தவிர ஒவ்வொரு உணவு பரிமாறும் போதும் அதன் சிறப்பு என்ன என்பதைச் சொல்லி பரிமாறுவதற்காகவே ஒரு பணியாளும் நியமிக்கப்பட்டுள்ளாராம்.

    English summary
    Special arrangements and Royal Welcome has been all set ready for Ivanka's tonight dinner with PM Narendra Modi at world's largest dinig hall at Taj Faluknuma with 5 special Hyderabadi Cuisines.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X