For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஞாயிறு போற்றுதும்.. ஞாயிறு போற்றுதும்..! ராஜஸ்தான் மாநில பள்ளிகளில் சூரிய வணக்கம் கட்டாயம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 48 ஆயிரம் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் தினசரி காலையில் சூரிய வழிபாடு நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் அரசு மற்றும் தனியார் நடத்தும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் அனைத்திலும் தினசரி காலையில் 20 நிமிடங்கள் மாணவர்கள் கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 5 நிமிடங்கள் தேசபக்தி பாடல்கள், மற்றும் கூட்டுப் பாடல்களை பாட வேண்டும்.

Surya namaskar made compulsory in 48,000 schools Rajasthan

அடுத்த 10 நிமிடங்கள் சூரிய வழிபாடு, யோகா மற்றும், தியானம் போன்றவற்றை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். கடைசி 5 நிமிடங்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகளை பள்ளிகளில் உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் உள்ள 48 ஆயிரம் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு இந்த விதி பொருந்தும். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் நடத்தும் பள்ளிகளும் இதில் கணிசமாக உள்ளது. எனவே சூரிய வணக்கத்தின் மூலம் இந்துத்துவா கருத்தை பரப்ப ராஜஸ்தானில் ஆளும் பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக சிறுபான்மையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சூரிய வழிபாடு ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் பிறப்பிக்கபட்ட இத்தகைய உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பாஜக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Amid protests from different corners, the education department issued orders on Tuesday for government and private schools to introduce surya namaskar in all secondary and senior secondary classes with immediate effect.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X