For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நமாஸில் சூரிய நமஸ்காரம் போன்று தான் அசைவுகள் உள்ளது: ராஜஸ்தான் அமைச்சர் வாசுதேவ்

By Siva
Google Oneindia Tamil News

ஜெய்பூர்: சூரிய நமஸ்காரம் ஒன்றும் மதம் சார்ந்தது அல்ல என்றும், அது யோகாவின் ஒரு ஆசனம் என்றும், நமாஸில் கூட அதே போன்ற அசைவுகள் உள்ளது என்றும் பாஜக தலைவர் வாசுதேவ் தேவ்னானி தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகா தினம் வரும் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதில் சூரிய நமஸ்காரம் இருப்பதற்கு முஸ்லீம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் இருந்து சூரிய நமஸ்கார நிகழ்ச்சியை மட்டும் மத்திய அரசு நீக்கியுள்ளது.

இந்நிலையில் சூரிய நமஸ்காரம் பற்றி பாஜக தலைவரும், ராஜஸ்தான் மாநில கல்வித் துறை அமைச்சருமான வாசுதேவ் தேவ்னானி கூறுகையில்,

சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரம் என்பது எந்த ஒரு மதத்தையும் சேர்ந்த செயல் அல்ல. அது யோகாவின் ஒரு ஆசனம் ஆகும். அப்படி இருக்கையில் அதை மதத்துடன் சேர்த்து பார்க்கக் கூடாது.

நமாஸ்

நமாஸ்

முஸ்லீம்களின் நமாஸில் கூட சூரிய நமஸ்காரம் போன்ற அசைவுகள் உள்ளன. ஏராளமான முஸ்லீம் நாடுகளில் வசிக்கும் மக்கள் சூரிய நமஸ்காரம் செய்து வருகிறார்கள்.

முஸ்லீம்கள்

முஸ்லீம்கள்

முஸ்லீம்கள் சூரிய நமஸ்காரத்தை எதிர்ப்பதற்கு காரணம் குழப்பம். முஸ்லீம் சமுதாயத்தில் நிலாவை வைத்து சில சடங்குகள் உள்ளன. நிலாவும், சூரியனும் சமமானது. நீங்கள் நிலாவை கொண்டாடும்போது சூரியனை மட்டும் ஏன் வெறுக்க வேண்டும்?

சூரியன்

சூரியன்

சூரிய நமஸ்காரம் என்றால் வெளியே வந்து சூரியனை பார்த்து தான் செய்ய வேண்டும் இல்லை. உங்கள் அறையில் இருந்து கொண்டே சூரியனை பார்க்காமலே சூரிய நமஸ்காரம் செய்யலாம். அந்த ஆசனத்திற்கு பெயர் மட்டும் தான் சூரிய நமஸ்காரம்.

அரசியல் நோக்கம்

அரசியல் நோக்கம்

சிலர் அரசியல் நோக்கத்துடன் முஸ்லீம்களை சூரிய நமஸ்காரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு தவறாக வழி நடத்தி வருகிறார்கள். இந்துத்துவம் என்பது மதம் அல்ல வாழ்வின் ஒரு வழி என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்படி இருக்கையில் சூரிய நமஸ்காரம் எப்படி மத செயல் ஆகும் என்றார் தேவ்னானி.

English summary
Rajasthan education minister Vasudev Devnani told that Surya Namskar is not religious and even Namaz has similar moves.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X