For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அஜித் தோவலுக்கு போன் போட்ட அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்.. தீவிரவாதத்துக்கு எதிராக கை கோர்க்க உறுதி

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீர் மாநில யூரி ராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் கண்டனம் தெரிவித்தார்.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவலை இன்று காலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சூசன் ரைஸ், தீவிரவாதிகளையும், அவர்களுக்கு ஊக்கம் கொடுப்போரையும் உலகின் பார்வைக்கு கொண்டுவர அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும் என சூசன் அப்போது உறுதியளித்தார்.

Susan Rice rings Doval- Assures support in war against terror

ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புவதாகவும் அப்போது அவர் கூறினார்.

பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா முயன்றுவருகிறது. சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்ததும், அதற்கு ஆதரவாக வங்கதேசம், ஆப்கன், பூடான் நாடுகள் அதே முடிவை எடுத்ததும் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாகியுள்ளது. இந்த நேரத்தில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர், இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகருடன் ஆலோசனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The National Security Advisor of the United States of America, Susan Rice called her Indian counterpart, Ajit Doval and condemned the attack at Uri in which 18 soldiers were martyred. During the conversation, Susan Rice assured that efforts would be made to bring to justice terrorists and their perpetrators across the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X