For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு ட்வீட் போட்ட கேரளா முதல்வரை ட்விட்டரில் லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய சுஷ்மா ஸ்வராஜ்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: லிபியாவில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவில் சிக்கித் தவித்த 3 தமிழர்கள் உள்பட 29 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதில் கேரளாவை சேர்ந்த 17 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட கேரள மக்கள் ஊர் திரும்ப தனது அரசு செலவு செய்ததாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். இது குறித்து அறிந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடுப்பாகிவிட்டார்.

சுஷ்மா

உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் சுஷ்மா உம்மன் சாண்டியின் ட்வீட்டுக்கு ட்வீட் மேல் ட்வீட் போட்டு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

சாண்டி

மிஸ்டர் சாண்டி - ஈராக், லிபியா மற்றும் ஏமனில் சிக்கித் தவித்த கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை நாங்கள் மீட்டுள்ளோம். அவர்களுக்கு எல்லாம் யார் செலவு செய்தது? என்று சுஷ்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரளா

மிஸ்டர் சாண்டி- லிபியாவில் இருந்து 29 இந்தியர்களை காப்பாற்ற கேரளா செலவு செய்ததாக நீங்கள் தெரிவித்துள்ளீர்கள் என சுஷ்மா ட்வீட்டியுள்ளார்.

விவாதம்

மிஸ்டர் சாண்டி- இந்த விவாதத்தை நீங்கள் தான் துவங்கியது. நான் இல்லை. வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை காப்பாற்றுவது எங்கள் கடமை. அதை தான் நாங்கள் செய்து வருகிறோம் என்கிறார் சுஷ்மா.

English summary
External affairs minsiter Sushma Swaraj and Kerala CM Oommen Chandy debated over 29 Indians evacuated from Libya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X