For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மொரீசியஸ் சென்ற சுஷ்மா ஸ்வராஜ் விமானம் 14 நிமிடம் மாயமானதால் பதற்றம்

மொரீசியஸ் சென்ற சுஷ்மா ஸ்வராஜ் விமானம் மாயமானதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    சுஷ்மா ஸ்வராஜின் விமானம் 14 நிமிடம் மாயமானதால் பதற்றம்- வீடியோ

    டெல்லி: மொரீசியஸ் சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் விமானம் திடீரென 14 நிமிடங்கள் மாயமானதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் சுஷ்மா ஸ்வராஜின் விமானத்தில் இருந்து தொடர்புகள் கிடைத்ததால் பதற்றம் தணிந்தது.

    பிரிக்ஸ் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க சுஷ்மா சுவராஜ் 5 நாள் பயணமாக சனிக்கிழமையன்று தென்னாப்பிரிக்கா சென்றார். ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரம் மற்றும் மொரிசீயஸில் இறங்கி எரிபொருள் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    Sushma Swarajs plane en route from India to Mauritius goes untraceable for 14 minutes

    சனிக்கிழமையன்று பிற்பகல் 2.08 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து சுஷ்மா ஸ்வராஜ் புறப்பட்டு சென்றார். இந்திய எல்லையை கடந்த பிறகு மாலி கட்டுப்பாட்டு அறையுடன் மாலை 4.44 மணி வரை விமானம் தொடர்பில் இருந்தது.

    ஆனால் மொரீசியஸ் எல்லைக்குள் சென்றபோது கட்டுப்பாட்டு அறையுடன் திடீரென 14 நிமிடங்கள் விமானம் தனது தொடர்பை இழந்தது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

    மொரீசியல் விமான கட்டுப்பாட்டு அறையும் அவசர நிலையை அறிவித்தது. 14 நிமிடங்களுக்குப் பிறகு மாலை 4.58 மணிக்கு சுஷ்மா ஸ்வராஜின் விமானத்துடன் மீண்டும் தகவல் தொடர்பு கிடைத்தது. இதையடுத்து மொரீசியஸ்லில் பாதுகாப்பாக சுஷ்மா ஸ்வராஜ் விமானம் தரை இறங்கியது. இதனால் பதற்றம் தணிந்தது.

    English summary
    The VVIP aircraft "Meghdoot" carrying Foreign Minister Sushma Swaraj to Mauritius lost contact with Air Traffic Control for 14 minutes on Saturday afternoon after entering the country's airspace.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X