For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லலித் மோடி விவகாரம்... விவாதத்துக்கு தயார்... சொல்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: லலித் மோடி விவகாரத்தில் தாம் உதவவே இல்லை; இது பற்றி நாடாளுமன்றத்தில் என் விளக்கத்தை அளிக்கிறேன் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி வழக்கில் இருந்து தப்பிக்க இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ள ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி, விசா பெறுவதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவி புரிந்ததாக தகவல் வெளியாகியது. இதேபோன்று ராஜஸ்தன் முதல்வர் வசுந்தராராஜேவும் லலித் மோடிக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டது.

Sushma Swaraj tweets on Lalit Modi issue again, says ready to debate

இதையடுத்து மேற்கண்ட விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடத்தவிட மாட்டோம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் போர்கொடி தூக்கியுள்ளன. ஆனால், எதிர்கட்சிகளின் கோரிக்கையை முற்றிலும் நிராகரித்த மத்திய அரசு, சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலகும் பேச்சுக்கே இடம் இல்லை என்று தெரிவித்து விட்டது.

இதனால் கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் சபையில் எந்த அலுவல்களும் நடைபெறவில்லை. 4 நாட்களும் இதே நிலைதான் நீடித்தது. இதனால் இரு சபைகளும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லலித் மோடி விவகாரத்தில் இது வரை மவுனம் காத்து வந்த சுஷ்மா ஸ்வராஜ், லலித் மோடிக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் சுஷ்மா ஸ்வராஜ், லலித் மோடிக்கு விசா கிடைப்பது தொடர்பாக நான் எந்த கோரிக்கையோ, பரிந்துரையோ செய்யவில்லை. ஒரு அமைச்சர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது. அதன் மூலம் தான் நாட்டு மக்களுக்கு எனது தரப்பு விளக்கத்தை அளிக்க முடியும்.

லலித் மோடி விவகாரத்தில் உங்களின் சட்ட விதிமுறைகளின்படி முடிவு செய்து கொள்ளுங்கள் என்று மட்டும் தான் இங்கிலாந்து அரசிடம் கூறினேன். நான் லலித் மோடிக்கு உதவியதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ளார்.

லலித் மோடி ஆவணங்களை பெற பிரிட்டன் தொழிலாளர்கட்சி தலைவர் கெய்த் வாஸை தொடர்பு கொண்ட தகவலையும் சுஷ்மா ஸ்வராஜ் முற்றிலும் நிராகரித்துள்ளார்.

English summary
External Affairs Minister Sushma Swaraj on Saturday took to twitter to defend herself. In a series of tweets Sushma Swaraj said that she has left it to UK Govt to decide under their rules.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X