For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா- பாகிஸ்தான் உறவில் அடுத்த கட்டம்.. இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரும் சந்திப்பு நடந்த இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

டெல்லி: அடுத்த வாரம் நடக்க உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரும் சந்திப்பு நடந்த இருக்கிறார்கள்.

கடந்த மாதம் பாகிஸ்தான் அதிபராக இம்ரான் கான் பதவியேற்றார். ராணுவத்தின் ஆதரவு இருக்கும் இவர் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.

Sushma Swaraj will meet Pakistan counterpart in UNGA meet next week

ஆனால் அதிசயமாக இம்ரான் கான் பிரதமர் மோடியை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதோடு, இரண்டு நாட்டை சேர்ந்த முக்கிய அமைச்சர்களும் சேர்ந்து உரையாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த வாரம் நடக்க உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரும் சந்திப்பு நடந்த இருக்கிறார்கள். வரும் 25-26 தேதிகளில் இந்த கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்திற்கு இடையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி ஆகியோர் சந்திப்பு நடத்த இருக்கிறார்கள். ஆனால் சரியாக இரண்டு நாளில் எந்த நாளில் சந்திப்பார்கள் என்று கூறப்படவில்லை.

இந்த சந்திப்பில் என்ன மாதிரியான விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று கூறப்படவில்லை. ஆனால் இந்த சந்திப்பு பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோர் சந்திப்பிற்கு முன்னோட்டமாக இருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

English summary
Sushma Swaraj will meet her Pakistan counterpart in UNGA meet next week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X