For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடிக்கு எதிராக பிரமாண பத்திரம் தாக்கல் செய்த ஐ.பி.எஸ். அதிகாரியை அதிரடியாக நீக்கியது குஜராத் அரசு

Google Oneindia Tamil News

அகமதாபாத் : குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை வழக்கில் நரேந்திரமோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த காரணத்தால் பழிவாங்கப்பட்ட ஐ.பி.எஸ்.அதிகாரி சஞ்சீவ்பட்டை பணியிலிருந்தே நீக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து அவசரமாக கூட்டிய கூட்டத்தில் இந்துக்கள் முஸ்லிம்களுக்கு எதிரான தங்களது கோபத்தை வெளியிட அனுமதிக்கவேண்டும் என்று மோடி உத்தரவிட்டதாக சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார்.

sanjiv bhatt ips

இதனைத் தொடர்ந்து மோடி அரசு, சஞ்சீவ் பட்டை பழிவாங்கும்விதமாக துறைசார்ந்த விசாரணைக்கு உள்படாதது, அனுமதியின்றி விடுமுறையில் சென்றது, காவலர் பயிற்சிப் பள்ளித் தலைவராக இருந்தபோது அலுவலக வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியது, ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்தது போன்ற காரணங்களைக் கூறி சஸ்பெண்ட் செய்தது.

சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஓராண்டு முடிந்த நிலையில், மத்திய உள் துறையின் மறு ஆய்வுக் குழு இவரது சஸ்பெண்ட் உத்தரவை மறு ஆய்வு செய்தது. அப்போது இவரது சஸ்பெண்டை நீட்டிக்கத் தேவையில்லை என அக்குழு முடிவெடுத்தது.

இது குஜராத் மாநில அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது. மத்திய உள் துறையின் இந்தப் பரிந்துரையை குஜராத் மாநில ஏற்றுக்கொண்டது.

ஆயினும், மேலும் இரு குற்றச்சாட்டுகளுக்காக சஞ்சீவ் பட் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்ததால், அவர் உடனடியாகப் பணிக்குத் திரும்ப முடியாத சூழல் நிலவியது. இந்நிலையில், சஞ்சீவ்பட்டை பணியிலிருந்தே நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது குஜராத் மாநிர அரசு.

English summary
Suspended Gujarat Police officer Sanjiv Bhatt, who had taken on then Chief Minister Narendra Modi over the 2002 riots cases four years ago, has been sacked by the state government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X