For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புனே டூ பெலகாவி... 5 வயது குழந்தைக்கு உரிய நேரத்தில் மருந்துகளை கொண்டு வந்த ரயில்வே நிர்வாகம்

Google Oneindia Tamil News

பெலகாவி: கர்நாடகாவின் பெலகாவியில் 5 வயது குழந்தையின் உயிரை காப்பாற்றும் மருந்துகளை ரயில்வே அதிகாரிகள் சரியான நேரத்தில் கொண்டு வந்து சேர்த்து உயிரை காப்பாற்றியுள்ளனர்.

நாட்டில் அமலில் உள்ள லாக்டவுன் பல்வேறு துயரங்களை மட்டும் அல்லாது நெகிழ்வு சம்பவங்களையும் வெளிப்படுத்தி வருகிறது. கர்நாடகாவின் பெலகாவியில் 5 வயது குழந்தைக்கு மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த மருத்துவர் சிகிச்சை அளித்து வந்தார்.

SW Railways brings crucial medicine for child from Pune to Belagavi

அந்த குழந்தைக்கு மிக முக்கியமான உயிரை காப்பாற்றக் கூடிய மருந்து, புனேவில் இருந்து பெலகாவிக்கு கொண்டுவரப்பட வேண்டும். நாடு தற்போது லாக்டவுனால் முடக்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து மகாராஷ்டிரா அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்ட குழந்தையின் பெற்றோர், புனேவில் உள்ள தங்களது உறவினர்கள் மருந்தை பெலகாவி கொண்டு வருவதற்கு அனுமதி கேட்டிருந்தனர். இந்நிலையில் பெலகாவி எம்பியும் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சருமான சுரேஷ் அங்காடியையும் குழந்தையின் பெற்றோர் அணுகியிருந்தனர்.

கிம் ஜாங் உன் உடல் நிலை விவகாரம்- நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாக தென்கொரியா தகவல்கிம் ஜாங் உன் உடல் நிலை விவகாரம்- நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாக தென்கொரியா தகவல்

இதன்பின்னர் குழந்தைக்கு தேவையான மருந்துகள் புனே ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. அங்கிருந்து பெலகாவி வழியாக செல்லும் சரக்கு ரயில் அதிகாரிகளிடம் அம்மருந்து கொடுத்து அனுப்பப்பட்டது. பெலகாவி ரயில் நிலையத்தில் சேர்ப்பிக்கப்பட்ட அம்மருந்துகள் உரிய நேரத்தில் குழந்தையின் பெற்றோரிடம் சேர்க்கப்பட்டது.

Recommended Video

    வியாழன் முதல் தடுப்பூசி போடுகிறோம்..தடுப்பூசி கண்டிபிடித்த இங்கிலாந்து

    தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்டு ஒரு குழந்தையின் உயிரை காப்பற்றியுள்ளனர்.

    English summary
    South Western Railway offiricals bring a crucial medicine for child from Maharashtra's Pune to Karnataka's Belagavi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X