For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூய்மை இந்தியா: இனி ஹோட்டலில் கூடுதலாக 0.5 சதவீதம் சேவை வரி கொடுக்கணும்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: தூய்மை இந்தியா திட்டத்திற்கு நிதி சேர்ப்பதற்காக வரிவிதிக்கத்தக்க அனைத்து சேவைகளுக்கும் கூடுதலாக 0.5 சதவீதம் வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சேவை வரி உயர்வு வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதுதொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அனைத்து சேவைகள் பிரிவிலும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக 0.5 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு வரும் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக தனது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வரி விதிப்பு அமல்படுத்தப்பட உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுத்தமான பாரதம்

சுத்தமான பாரதம்

சுத்தமான பாரதத்தை உருவாக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தூய்மை இந்தியா திட்டத்தினை நாடுமுழுவதும் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்திற்கு ஏராளமானோர் நிதி அளித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சேவைவரி 0.5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளர்.

சேவை வரி உயர்வு

சேவை வரி உயர்வு

தொலைபேசி கட்டணம், ஹேட்டலில் சாப்பிடுவது மற்றும் தங்குவதற்கான கட்டணம், காப்பீடு தொகை போன்றவற்றுக்கு தற்போது 14 சதவீதம் சேவை வரி விதிக்கப்படுகிறது.

கடந்த மே 31ம் தேதி வரை 12.36 சதவீதம்தான் சேவை வரி விதிக்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, ஜூன் 1ம் தேதி முதல் சேவை வரி 14 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

0.5 சதவீதம் வரி உயர்வு

0.5 சதவீதம் வரி உயர்வு

தற்போது, தூய்மை இந்தியா திட்டத்துக்காக சேவை வரி மேலும் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தாராளமாக நிதி உதவி வழங்குமாறு மத்திய அரசு ஏற்கனவே கேட்டுக் கொண்டு உள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்துக்கு நிதி திரட்டுவதற்காக, மக்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு சேவைகள் மீது விதிக்கப்படும் சேவை வரியை மத்திய அரசு நேற்று 0.5 சதவீதம் உயர்த்தியது. எனவே இனிமேல் சேவை வரி 14.5 சதவீதமாக இருக்கும்.

நவம்பர் 15முதல் அமல்

நவம்பர் 15முதல் அமல்

இந்த சேவை வரி உயர்வு வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த 0.5 சதவீத சேவை வரி உயர்வின் மூலம் கிடைக்கும் தொகை முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக செலவிடப்படும். இந்த கூடுதல் 0.5 சதவீத சேவை வரியின் மூலம் இந்த நிதி ஆண்டில் அரசுக்கு ரூ.400 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

English summary
Everything from your mobile bills to eating out in air-conditioned restaurants, a visit to a spa, dry cleaning charges and coaching classes fees are set to get more expensive with the government deciding to levy a 0.5% Swachh Bharat cess on all services that attract service tax.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X