For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'கத்தி' படத்திற்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்கிறதா?: சு.சாமி கேள்வி

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: கத்தி படத்திற்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க முடிவு செய்துள்ளதாக தனக்கு கிடைத்த தகவல் உண்மையா என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய்யின் கத்தி படம் தயாரிப்பாளர் பிரச்சனையால் படாதபாடு படுகிறது. கத்தி தமிழகத்தில் 400 தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பதால் அதை திரையிட சில தமிழ் அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கத்தி படத்திற்கு பாதுகாப்பு அளிப்பது என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தற்போது தான் எனக்கு தகவல் கிடைத்தது. அதனால் கத்தி பட முன்பதிவு இன்று காலை துவங்குமாம். இது உண்மையா என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கத்தி படம் ரிலீஸாக உள்ள சென்னை தியேட்டர்கள் சிலவற்றின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
BJP leader Subramanian Swamy tweeted that, 'I have been informed just now that TN Govt has decided to provide protection so Kaththi seat reservation will start this morning. True?'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X