For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆன்லைனில் மதுபான ஆர்டரை தொடங்கியது ஸ்விக்கி.. வீட்டு வாசலிலேயே சரக்கை பெறுவது எப்படி?

Google Oneindia Tamil News

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில அரசிடம் ஒப்புதல் பெற்ற ஸ்விக்கி நிறுவனம் மதுபானங்களை வீட்டு வாசலிலேயே கொடுக்கும் சேவையை தொடங்கியுள்ளது.

Recommended Video

    ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும்... மதுவை வீட்டுக்கே டெலிவரி செய்யும் Swiggy

    உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி நிறுவனம் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே உணவு பொருட்களை கொண்டு வருகிறது. அதுபோல் கொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தடுக்க காய்கறிகளையும் மளிகை பொருட்களையும் ஸ்விக்கி மூலம் டோர் டெலிவரி செய்ய அரசு அனுமதி அளித்தது.

    இந்த நிலையில் மதுபானக் கடைகளை மாநில அரசுகள் திறந்து கொள்ளலாம் என்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து மதுக்கடைகள் பெரும்பாலான மாநிலங்களில் திறந்தவுடன் கடைகளில் கூட்டம் பெருக்கெடுத்தது.

    எங்கள் நாட்டு இறையாண்மையை மதிக்க வேண்டும்.. நேபாளத்திற்கு இந்தியா கண்டனம்.. தொடரும் உரசல்எங்கள் நாட்டு இறையாண்மையை மதிக்க வேண்டும்.. நேபாளத்திற்கு இந்தியா கண்டனம்.. தொடரும் உரசல்

    ராஞ்சி

    ராஞ்சி

    இந்த நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஜார்க்கண்ட் அரசு மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய ஸ்விக்கி நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது. இதையடுத்து ராஞ்சியில் மதுபான டோர்டெலிவரியை ஸ்விக்கி தொடங்கியது.

    டோர் டெலிவரி

    டோர் டெலிவரி

    மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்வது போன்றுதான் இதையும் செய்ய வேண்டும். Wine Shops என்ற ஒரு புதிய பகுதி இருக்கும். அதில் ஆர்டர் செய்ய வேண்டும். மதுபாட்டில்களை ஸ்விக்கி நிறுவனம் எப்படி டோர் டெலிவரி செய்கிறது என்பதை பார்ப்போம். அனைத்து ஆர்டர்களும் ஒரு ஓடிபி எண்ணைக் கொண்டு செய்யப்படும்.

    ஸ்விக்கி ஆப்

    ஸ்விக்கி ஆப்

    குறிப்பிட்ட ஓடிபியை டெலிவரி செய்யும் போது வாடிக்கையாளர் காட்ட வேண்டும். ஒரு வாடிக்கையாளர் மாநில சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட ஆல்கஹாலை ஆர்டர் செய்யக் கூடாது. இந்த சேவையை பெற ராஞ்சியில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்விக்கி ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும்.

    மதுபாட்டில்கள்

    மதுபாட்டில்கள்

    ஆன்லைன் வழியிலான மதுபான விற்பனைக்கு ஸ்விக்கி அறிவித்துள்ள வெரிஃபிகேஷன் பிராசஸ்ஸை செய்ய வேண்டும். உங்கள் வயதை சரிபார்க்க ஒரு அரசு அடையாள சான்றிதழுடன் செல்பி எடுத்து அதை ஸ்விக்கி ஆப்பில் பதிவிட வேண்டும். நீங்கள் ஆன்லைனில் எத்தனை பாட்டில்களை வாங்கலாம் என்பதற்கு ஒரு வரம்பு இருக்கும். அது சரிபார்க்கப்படும்.

    நகரங்கள்

    நகரங்கள்

    ஆர்டரை பெற்றுக் கொண்டு டெலிவரி செய்வோரிடம் ஓடிபியை காண்பித்து சரக்கை பெற்றுக் கொள்ள வேண்டியதுதான். ஆன்லைன் வழியாக மதுபான டெலிவரிக்கு ஸ்விக்கி நிறுவனம் வசூலிக்கும் டெலிவரி சார்ஜஸ் எவ்வளவு என தெரியவில்லை. இந்த சேவையை இந்தியா முழுவதும் உள்ள பிற நகரங்களுக்கும் இந்த சேவையை விரிவுப்படுத்தும் என ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    English summary
    Swiggy is going to door delivery liquor in Jharkhand. Here are the steps how to get door delivery.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X