For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடுமுழுவதும் பரவும் பன்றிக்காய்ச்சல்- 9 மாதத்தில் 1,873 பேர் மரணம்

கடந்த 9 மாத காலத்தில் நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு 1873 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    அதிகரிக்கும் பன்றி காய்ச்சல் ! மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்-வீடியோ

    டெல்லி: நாடு முழுவதிலும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த ஒன்பது மாதங்களில் 34 மடங்கு அதிகரித்துள்ளது.

    நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு 1873 பேர் மரணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தசரா, துர்கா பூஜை போன்ற பண்டிகைகள் காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,000 அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

    பன்றிக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் குஜராத், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தைத் தொடர்ந்து தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.

    பன்றிக்காய்ச்சலுக்கு 35,523

    பன்றிக்காய்ச்சலுக்கு 35,523

    பன்றிக் காய்ச்சல் தொடர்பான புள்ளிவிவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து செப்டம்பர் வரையில் நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு 1,873 பேர் இறந்துள்ளதாகவும், 35,523 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பன்றிக்காய்ச்சலுக்கு 35,523

    பன்றிக்காய்ச்சலுக்கு 35,523

    பன்றிக் காய்ச்சல் தொடர்பான புள்ளிவிவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து செப்டம்பர் வரையில் நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு 1,873 பேர் இறந்துள்ளதாகவும், 35,523 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதலிடத்தில் குஜராத்

    முதலிடத்தில் குஜராத்

    இந்த ஆண்டு செப்டம்பர் வரை பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 7,300 பேருடன் குஜராத் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து 5,388 பேருடன் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

    தமிழகத்தில் 3173 பேர் பாதிப்பு

    தமிழகத்தில் 3173 பேர் பாதிப்பு

    உத்தரபிரதேசத்தில் 3,782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பன்றிக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டோர் உத்தரபிரதேசம் மூன்றாம் இடத்திலும் உள்ளன. தமிழகத்தில் 3,173 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு நான்காவது இடத்திலும் 3,141 பேருடன் கர்நாடகா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

    மகாராஷ்டிராவில் 595 பேர் பலி

    மகாராஷ்டிராவில் 595 பேர் பலி

    பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோர் எண்ணிக்கையில் 595 பேருடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. குஜராத் இரண்டாம் இடத்திலும்,428, ராஜஸ்தான் மூன்றாம் இடத்திலும்,202, உத்தரபிரதேசம் நான்காம் இடத்திலும்,122 உள்ளன.
    தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 16 பேர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை தெலங்கானாவில் 18, ஆந்திராவில் 14, கர்நாடகாவில் 15 என உள்ளது.

    நெரிசலால் பரவிய நோய்கள்

    நெரிசலால் பரவிய நோய்கள்

    கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களை ஒப்பிடும்போது இந்த ஆண்டு உயிரிழப்பு 9 மடங்கும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 மடங்கும் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் மக்கள் நெரிசல் காரணமே என்கிறார் தேசிய நோய் தடுப்பு மையத்தின் இயக்குநரான ஏ.கே. தாரிவால்.

    இரண்டு வாரங்களில் பாதிப்பு

    இரண்டு வாரங்களில் பாதிப்பு

    ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எச்1என்1 வைரஸ் எளிதாகப் பரவும். பண்டிகை காலத்தில் ஏற்படும் மக்கள் நெரிசலால் இந்த வைரஸ் அதிகம் பரவுகிறது. தற்போது நடந்து முடிந்த தசரா, துர்கா பூஜை போன்ற பண்டிகைகள் காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,000 அதிகரித்துள்ளது.
    முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.

    English summary
    Swine flu cases and nearly 1,873 people succumbing to the virus attack so far this year, the country seems to be in the grip of a major outbreak.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X