For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில் நிலையங்களில் ஸ்வைப் மெஷின் வசதி.. விரைவில் அறிமுகம் !

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் விரைவில் ஸ்வெப் மெஷின் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: ரயில்வே முன்பதிவு டிக்கெட் கவுண்டர்களில் ஸ்வைப் மெஷின் வசதியை அறிமுகம் செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த 500,1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய 2000 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. மேலும் பழைய நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்தது.

swipe machine will intro in raiway station

இதையடுத்து தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் செபாசிட் செய்து வருகின்றனர். புதிய நோட்டுக்கள் போதிய அளவு புழக்கத்திற்கு இன்னும் வராததால் ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனிடையே நாடு முழுவதும் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ரயில்வே கவுண்டர்களில் ஸ்வைப் மெஷின் வசதியை அறிமுகம் செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகளிடம் ரயில்வே நிர்வாகம் 15,000 ஸ்வைப் மெஷின்களை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
Indian Railways have planed to use swipe machines at reservation counters
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X