For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா-வங்கதேச திரில் போட்டியை பார்த்த உ.பி. ரசிகருக்கு ஹார்ட்-அட்டாக்

By Veera Kumar
Google Oneindia Tamil News

லக்னோ: இந்தியா-வங்கதேசம் நடுவேயான உலக கோப்பை டி20 திரில் போட்டியை பார்த்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் ஹார்ட்-அட்டாக்கால் உயிரிழந்துள்ளார்.

இந்தியா-வங்கதேசம் நடுவேயான போட்டி கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்றது. இப்போட்டியில் கடைசி ஓவரின், கடைசி பந்தில் இந்தியா வெற்றி பெற்றது.

T20 world cup: UP man dies of heart attack during India-Bangladesh match

கடைசி 3 பந்துகளில் வங்கதேசம் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற முடியும் என்ற நிலையிலும், 3 பந்துகளிலும் ஒரு ரன்னும் எடுக்க முடியால் 3 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தோற்றது.

கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கிய திரில் போட்டிகளில் ஒன்றாக அந்த போட்டி மாறிப்போனது. இந்நிலையில், உபி மாநிலம் பிஸ்தாவுலி கிராமத்தை சேர்ந்த ஓம் பிரகாஷ் சுக்லா என்பவரும் இப்போட்டியை டிவியில் பார்த்துக்கொண்டிருந்துள்ளார். ஆட்டத்தின் 2வது மற்றும் 3வது பந்துகளில் வங்கதேச பேட்ஸ்மேன் முஸ்பிகுர் ரஹிம் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசியபோது, ஹார்ட்-அட்டாக் ஏற்பட்டு ஓம் பிரகாஷ் சுக்லா மரணமடைந்துள்ளார்.

இதற்கு அடுத்த 3 பந்துகளில்தான் ஆட்மட் இந்தியா பக்கம் வந்தது. பாவம் அதை பார்க்க ஓம் பிரகாஷ் சுக்லாவுக்கு பொறுமையில்லாமல் போய்விட்டது.

English summary
An elderly man from Bistauli village in Gorakhpur, UP died of heart attack during the last overs of India’s nailbiting one-run win over Bangladesh on Wednesday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X