For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஹில்ரமணிக்கு எதிராக சிபிஐ விசாரணை.. பிரசாந்த் பூஷன் அதிருப்தி.. கடுப்பான கட்ஜு

Google Oneindia Tamil News

Recommended Video

    Tahilramani | தஹில் ரமாணி மீது முறைகேடு புகார்.. சிபிஐ விசாரிக்க உத்தரவு-வீடியோ

    டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில்ரமணி விவகாரத்தை முன்வைத்து ட்விட்டரில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு ஆகியோருடைய உரசல் ஏற்பட்டு உள்ளது.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த தஹில்ரமணியை, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணி இடமாற்றம் செய்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் உத்தரவிட்டது.

    சென்னை ஹைகோர்ட் போன்ற பெரிய நீதிமன்றத்தில் பணியாற்றிவிட்டு, நாட்டிலேயே மிக சிறிய உயர்நீதிமன்றத்திற்கு தன்னை பணியிடமாற்றம் செய்து, அனுப்புவது அவமரியாதை என்று கருதிய தஹில்ரமணி, கொலீஜியம் தனது முடிவை மறு பரிசீலனை செய்வதற்கு கோரிக்கை விடுத்தார்.

    ஆனால் இவரது கோரிக்கையை ஏற்க மறுத்த கொலீஜியம் தனது முடிவில் உறுதியாக இருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த தஹில்ரமணி செப்டம்பர் 6ஆம் தேதி தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார்.

     சிபிஐ நடவடிக்கை

    சிபிஐ நடவடிக்கை

    இந்த நிலையில் உளவுத்துறை சார்பில், தஹில்ரமணி பற்றி 5 பக்க அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் முறைகேடாக சென்னையில் இரண்டு பிளாட்டுகளை, தஹில்ரமணி வாங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், சிபிஐ, தஹில்ரமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

    சிபிஐ நடவிக்கை

    சிபிஐ நடவிக்கை

    இந்த நிலையில் உளவுத்துறை சார்பில், தஹில்ரமணி பற்றி 5 பக்க அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் முறைகேடாக சென்னையில் இரண்டு பிளாட்டுகளை, தஹில்ரமணி வாங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், சிபிஐ, தஹில்ரமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

    ஆச்சரியப்படும் பிரசாந்த் பூஷண்

    இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சமூக ஆர்வலரும், பிரபல வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண். அதில், "உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. அரசியலுக்காக வழங்கப்பட்ட ஒரு உளவுத்துறை அறிக்கையை அடிப்படையாக வைத்துக்கொண்டு, ஒரு தலைமை நீதிபதி மீது சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒப்புக்கொண்டுள்ளார். சொத்துக் குவிப்பு தொடர்பாக வேறுபல நீதிபதிகள் மீது டாக்குமென்ட்ரி ஆதாரங்கள் இருக்கக்கூடிய நிலையிலும்கூட, தஹில்ரமணிக்கு, எதிராக இவ்வாறு ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளார்" என்று பிரசாந்த் பூஷண் ட்வீட் செய்துள்ளார்.

    கட்ஜு காட்டம்

    இந்த ட்வீட்டுக்கு வாலின்டையராக சென்று, கமெண்ட் பதிவு செய்துள்ளார் மார்கண்டேய கட்ஜு. அதில் அவர், விசாரணை என்பதே, தீர்ப்பு ஆகிவிடாது. விசாரணையை எதிர்ப்பதற்கு நாம் என்ன காரணம் சொல்லிவிட முடியும்? நான் அவ்வப்போது நீதிமன்றத்தில் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை என்னவென்றால், விசாரிக்கப்படுவதை, நான் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்பதுதான்.

    தொடர் ட்வீட்

    இவ்வாறு, ஒரு ட்வீட்டில் கூறியுள்ள மார்கண்டேய கட்ஜு மற்றொரு ட்வீட்டில் எதையாவது மறைக்க வேண்டும் என்று வரும்போது தான் தங்களை பற்றி விசாரணை நடப்பதை எதிர்ப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், பிரசாந்த் பூஷண் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

    English summary
    Markandey Katju oppose, Prashant Bhushan's tweet over former Chennai High Court chief justice Tahilramani.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X