For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவன் கோவில்தான் தாஜ்மஹாலாக மாற்றப்பட்டது: பாஜக எம்.பி. வினய் கத்தியார் பகீர் பேச்சு

சிவன் கோவில்தான் தாஜ்மஹாலாக மாற்றப்பட்டதாக பாஜக எம்.பி. வினய் கத்தியார் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

அயோத்தியா: ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் முன்னர் சிவன் கோவிலாக இருந்தது என பாஜகவின் மூத்த தலைவர் வினய் கத்தியார் எம்.பி. பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வினய் கத்தியார் கூறியதாவது:

ஆக்ராவில் இருப்பது தேஜோ மஹால், அதாவது சிவன் கோவில். இந்து மன்னர்களால் கட்டப்பட்டதுதான் தாஜ்மஹால்.

Taj Mahal was actually Shiva Temple, says BJP MP Vinay Katiyar

கோவிலின் கட்டமைப்பை பார்த்தாலே அது சிவன் கோவிலாக இருந்தது தெரியவரும். சிவன் கோவிலில்தான் மேலிருந்து கீழே நீர் சொட்டும் வகையில் கட்டப்பட்டிருக்கும்.

தாஜ்மஹாலில் இந்த அமைப்பும் இருக்கிறது. இருந்தபோதும் தாஜ்மஹாலை இடிக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் விரும்பும் தாஜ்மஹாலை நாம் பாதுகாக்க வேண்டும்.

Taj Mahal was actually Shiva Temple, says BJP MP Vinay Katiyar

இவ்வாறு வினய் கத்தியார் கூறினார்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் வினய் கத்தியார் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP MP Vinay Kaityar has said that the Taj Mahal was known as Shiva Temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X