For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”உங்கள் கழிவுகளை கழிப்பறைக்கு எடுத்து செல்லுங்கள்”- யூனிசெப் இந்தியா

Google Oneindia Tamil News

டெல்லி: உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் தோராயமாக சுமார் 10 கோடி பேருக்கு மேல் கைப்பேசியை உபயோகப் படுத்துகின்றனர்.உலக அளவில் தோராயமாக 7 கோடி மக்களில், 6 கோடி பேர் மொபைல் போன் வசதியை பெற்றுள்ளனர்.

ஆனால், 4கோடிக்கும் குறைவான மக்களே கழிப்பறை வசதியை வீடுகளில் பெற்றுள்ளனர்.

முக்கால் வாசி மக்கள் இன்னும் வெட்ட வெளியை தான் கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர் என்பது வருத்ததிற்கு உரிய செய்தி.

டேக் தி பூ இன் டூ லூ:

டேக் தி பூ இன் டூ லூ:

இதற்காகதான் பொது நல நிறுவனமான யூனிசெப் "டேக் தி பூ இன் டு தி லூ" என்ற விழிப்புணர்வு பிராச்சாரத்தை தொடங்கியுள்ளது.

அதற்கு "உங்களது கழிவுகளை கழிப்பறைக்கு எடுத்து செல்லுங்கள்" என்று பொருள்.

யூனிசெப் நிறுவனம்:

யூனிசெப் நிறுவனம்:

அந்நிறுவனத்தின் கருத்துப்படி,

உலக அளவில் இந்தியாதான் அதிக அளவிலான மக்களில் 620 கோடி பேருக்கும் மேல் இன்னும் கழிப்பறை வசதி இல்லாமல் இருக்கின்றனர்.இந்திய மக்கள் தொகையில் கால்வாசி மக்கள்தான் கழிப்பறையை பயன்படுத்துகின்றனர்.

நுண்ணுயிர் தொற்று:

நுண்ணுயிர் தொற்று:

44 சதவீத தாய்மார்கள் தங்களது குழந்தைகளின் கழிவுகளை திறந்த வெளியில்தான் அப்புறப்படுத்துகிறார்கள்.இதனால் பாக்டீரியா,வைரஸ்,அமீபியாஸிஸ் போன்ற பயங்கரமான நுண்ணுயிர் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

திறந்த வெளி கழிவறை:

திறந்த வெளி கழிவறை:

வெளியில் மலம் கழிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் "டையரியா" எனப்படும் வயிற்றுப்போக்கால் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர்.இது உடல்சத்துக்கள் குறைபாடு,சோர்வு,நிமோனியா போன்ற கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.இந்தியாவில் 48 சதவீத குழந்தைகள் உடல் சோர்வு குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் அவர்களுடைய கல்வி கற்கும் திறன் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

20 சதவீத மக்களின் அறியாமை:

20 சதவீத மக்களின் அறியாமை:

எனினும் இந்தியாவில் தூய்மை மற்றும் உடல்நலம் காக்கும் சுகாதார நோக்கங்கள் செயல்பட்டாலும் அது அதிகரிக்கவில்லை.திறந்தவெளி பயன்பாடுகள் இன்னும் உலக அளவில் 20சதவீத ஏழை மக்களிடம் காணப்படுகிறது.

பாதுகாப்பற்ற திறந்த வெளி:

பாதுகாப்பற்ற திறந்த வெளி:

திறந்தவெளி பயன்பாட்டால் பெண்கள் பெரும்பாலும் பாதுகாப்பற்ற நிலைமை,தங்களுடைய தன்மானக் குறைபாடு போன்றவற்றை உணர்கிறார்கள்.மேலும்,கழிவுகளை வெளியேற்ற அவர்கள் இரவு வரை காத்திருக்க வேண்டியுள்ளது திறந்த வெளி என்பதால்.

திணிக்கப்படும் கழிவுகள்:

திணிக்கப்படும் கழிவுகள்:

தினமும் 620 கோடி இந்தியர்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் மக்கள் தொகையில் பாதி அளவினர் சுமார் 65 கோடி கிலோ கழிவுகளை புவியில் திணிக்கின்றனர்.இது தொடர்ந்தால் நம்மால் வாழ்க்கையை பாதிக்கும் நோய்களில் இருந்து தப்பிக்கவே முடியாமல் போய்விடும்.

விழிப்புணர்வு வருமா ?:

விழிப்புணர்வு வருமா ?:

இதை தவிர்க்கதான் இந்த விழிப்புணர்வு பிராச்சாரம் என்று கூறியுள்ளது யூனிசெப் நிறுவனம்.

English summary
Daily 620 million Indians are defecating in the open. That's half the population dumping over 65 million kilos of poo out there every day. If this poo continues to be let loose on us, there will be no escaping the stench of life threatening infections, diseases and epidemics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X