For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்கைப், வாட்ஸ்ஆப், இமெயில், போன் மூலம் கூறினாலும் தலாக், தலாக் தான்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ஸ்கைப், வாட்ஸ்ஆப், எஸ்எம்எஸ், இமெயில் அல்லது போன் மூலம் தலாக் கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதே என்று அனைத்து இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய சட்டங்கள் பாரபட்சமாக இருப்பதாகவும், பெண்களுக்கு ஏற்றதாக இல்லை என்றும், அதனால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பொது நல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் இது குறித்து அனைத்து இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது அப்துல் குரேஷி கூறுகையில்,

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

மதத்தோடு இணைந்தது தான் இஸ்லாமிய சட்டம். அப்படி இருக்கையில் இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடுவது முறையல்ல. ஜனநாயக நாட்டில் சட்டப்படி மத சுதந்திரம் உள்ளது.

தலாக்

தலாக்

ஸ்கைப், வாட்ஸ்ஆப், எஸ்எம்எஸ், இமெயில் அல்லது போன் மூலம் மூன்று முறை தலாக் கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது தான்.

மறுதிருமணம்

மறுதிருமணம்

ஒரு ஆண் தனது மனைவியிடம் தலாக் கூறிவிட்டால் இத்தா காலத்திற்கு பிறகு அந்த பெண் மறுமணம் புரிந்து கொள்ளலாம். தலாக் கூறுவதால் அவரை வீட்டில் வைத்து அடைக்க வேண்டும் என்று இல்லை.

மனைவி

மனைவி

ஒரு முறை தலாக் கூறினாலும் சரி மூன்று முறை கூறினாலும் சரி இரண்டும் ஒன்று தான். தலாக்கிற்கு பிறகு அந்த பெண் சுதந்திரமானவர். அவசரப்பட்டு தலாக் கூறிவிட்டோமோ என்று கணவர் நினைத்தால் இத்தா காலத்தில் அவர் தனது மனைவியை திரும்ப அழைத்துக் கொள்ளலாம்.

ஆண் தான்

ஆண் தான்

ஆண் தான் தலாக் கூற வேண்டும். பெண் தலாக் பெற விரும்பினால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். தலாக் வேண்டுமானால் அவர் இமாமை அணுக வேண்டும்.

English summary
The All India Muslim Personal Law Board (AIMPLB) said that talaq delivered through Skype, WhatsApp, SMS, email or phone is
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X