For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலைமை மோசம்.. வேற வழியில்லை.. இறங்கி வந்த தாலிபன்கள்.. ஆப்கன் பெண்களுக்கு முதல் உரிமை.. புது ஆர்டர்

ஆப்கன் பெண்களுக்கு புது உத்தரவை பிறப்பித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் தாலிபன்கள்

Google Oneindia Tamil News

காபூல்: முதல்முறையாக தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு முதல் உரிமை வழங்கப்பட்டுள்ளது.. அதன்படி, பெண்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது, கட்டாய திருமணம் செய்யக்கூடாது என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மீண்டும் ஆப்கனில் ஆட்சியை பிடித்துள்ள தாலிபான்கள், அந்நாட்டு பெண்களுக்கு அவரது உரிமைகளை அளிப்போம் என்று முதல் வாக்குறுதியாகவே தந்திருந்தனர்.

ஆனால், அதற்கான அறிகுறிகள் நீண்டகாலமாகவே தென்படாமலேயே இருந்தது.. அமைச்சரவையிலும் பெண்கள் யாருமே நியமனம் செய்யப்படவில்லை.

அதிமுகவில் இரட்டை தலைமைதான்...சசிகலா, தினகரனுக்கு இடமில்லை - சொல்வது கடம்பூர் ராஜூஅதிமுகவில் இரட்டை தலைமைதான்...சசிகலா, தினகரனுக்கு இடமில்லை - சொல்வது கடம்பூர் ராஜூ

 அதிருப்திகள்

அதிருப்திகள்

ஆடைக் கட்டுப்பாட்டையும் தாலிபன்கள் கொண்டு வந்துவிட்டனர்.. பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி இல்லை.. ஸ்கிரீன் உதவியுடன் மாணவர்களை தனியாக பிரித்து உட்கார வைப்பதாக சொல்லி உள்ளனர்.. பெண் பிள்ளைகளுக்கு ஆசிரியைகள் தான் பாடம் நடத்துவர். மகளிர் மேம்பாட்டுத்துறையில் கூட பெண்கள் வேலைபார்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.. பல்கலைக் கழங்களில் பெண்கள் பணியாற்ற கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துவிட்டனர்.

 சம உரிமை

சம உரிமை

கடந்த 1996-2001ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு இப்படித்தான் பல தடைகள் இருந்தன.. அதனால் பழைய நிலைமையே மீண்டும் ஆப்கனில் கொண்டுவரப்பட்டுவிடுமோ என்ற கலக்கம் நிலவி வந்து கொண்டே இருக்கிறது.. ஆனால், ஆட்சிக்கு வந்த முதல்நாள், பெண்களுக்கு சம நீதி, சம உரிமை வழங்குவோம் என்று சொல்லி இதுநாள் வரை வழங்காதது சர்வதேச அளவில் தாலிபன்களுக்கு நெருக்கடியை தந்துள்ளது.. மேலும் மனித உரிமைகள் மீறலில் ஈடுபடுவதும் தாலிபான்களுக்கு சிக்கலை தந்து வருகிறது.

 உலக நாடுகள்

உலக நாடுகள்

ஏற்கனவே உலக நாடுகள் பலவும் தாலிபன்கள் அரசை அங்கீகரிக்க மறுத்துள்ளன.. நிதி உதவியும் செய்யப்படாமல் ஒதுக்கி வைத்துவிட்டன.. தூதரக உறவுகளையும் பல நாடுகள் தவிர்த்துவிட்டன... இதனால் கிட்டத்தட்ட தனித்து விடப்பட்ட நாடாகவே ஆப்கன் இருந்து வருகிறது. இப்படியே போனால் நிலைமை மேலும் சிக்கலாகும் என்று தாலிபன்கள் உணர்ந்து விட்டனர்.. அதனால், சர்வதேச நெருக்கடிக்கு பணியும் விதமாக முதல் கட்டமாக பெண்களுக்கு உரிமைகள் தலிபான்கள் ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது..

 திருமணம்

திருமணம்

இது தொடர்பாக தாலிபான்கள் ஒரு அரசாணையும் வெளியிட்டுள்ளனர்.. அதில், ''பெண்களை ஒரு சொத்தாகக் கருதக்கூடாது... பெண்களைத் திருமணத்துக்கு கட்டாயப்படுத்தக் கூடாது... அவர்களின் சம்மதம் பெற்ற பின்புதான் திருமணம் நடத்தப்பட வேண்டும்.. ஒரு பெண்ணை அமைதிக்கு ஈடாகவோ அல்லது பகைமையை முடிவாகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது.. பெண்களை சொத்தாகக் கருதி அவரை கைமாற்றுவதோ, அல்லது விற்பனை செய்வதோ கூடாது... கணவரை இழந்த பெண்களுக்குக் கணவரின் சொத்தில் பங்கு வழங்கிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது..

Recommended Video

    Afghan-க்கு உதவ துடிக்கும் India-வுக்கு Condition போட்ட Pakistan | Oneindia Tamil
    கல்வி

    கல்வி

    ஓரளவு தாலிபன்கள் இறங்கி வந்துள்ளதாகவே இது பார்க்கப்பட்டாலும், பெண்களுக்கு கல்வி உரிமை வழங்குவது குறித்தோ, வெளியே சென்று வேலை பார்ப்பது குறித்தோ எந்தவிதமான அறிவிப்பும் இல்லை.. கல்விதான் முக்கிய சக்தியாக ஆப்கன் பெண்களுக்கு கிடைத்து வந்த நிலையில் அதை பற்றி எதையுமே சொல்லாதது அந்நாட்டு பெண்களை மட்டுமல்லாமல், சர்வதேச நாடுகளை மறுபடியும் கவலைக் கொள்ள வைத்து வருகிறது.

    English summary
    Taliban bans forced marriage of women afghan and release decree
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X