• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ரெடி.. ஸ்டார்ட்.. வேலையை காட்டிய தாலிபான்கள்.. ஆண்கள் தனி, பெண்கள் தனி.. அமைச்சர் போட்ட புது உத்தரவு

Google Oneindia Tamil News

காபூல்: பல்கலைக்கழகங்களில் மாணவர்களும், மாணவியர்களும், தனித்தனி கிளாஸ் ரூம்களில் படிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தாலிபான்கள் கொண்டு வந்துள்ளனர்.. மேலும் தலையில் இருந்து கால் வரை மறைக்கும் இஸ்லாமிய பாரம்பரிய உடைகளை அந்நாட்டு பெண்கள் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.

நீண்ட காலம் கழித்து, பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, ஆப்கான்கள் நாட்டை கைப்பற்றிய நிலையில், அது அங்குள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றுதான் கருதப்பட்டுவருகிறது..

அதேசமயம், தாலிபன்களின் ஆட்சியில் பெண்களும், பெண் குழந்தைகளும் என்ன பாடுபட போகின்றனரோ என்ற கலக்கமும், கவலையும், உலக மக்களையே கவ்வியுள்ளது.. எங்கே மறுபடியும் தங்களை கடந்த காலங்களில் நடத்தியதை போலவே மோசமாக நடத்தப்பட்டு விடுவார்களோ என்ற அச்சம்தான் அதற்கு காரணம்.

Chennai Traffic alert: மெட்ரோ 2ஆம் கட்ட பணிகள்.. சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்Chennai Traffic alert: மெட்ரோ 2ஆம் கட்ட பணிகள்.. சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

 கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்


குறிப்பாக, புர்கா அணியாமல் பெண்கள் வெளியே வரக்கூடாது, குடும்ப நபர்கள் அதாவது ரத்த உறவு கொண்ட ஆண்களின் துணையுடன்தான் அவர்கள் வெளியே வரவேண்டும், பெண்கள் ஹீல்ஸ் அணிய கூடாது, பொதுவிடங்களில் பெண்கள் சத்தமாக பேசக்கூடாது, பெண்களின் குரலை அந்நியர்கள் கேட்டுவிடக்கூடாது என்பன போன்ற ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்திருந்ததை அந்நாட்டு பெண்கள் எளிதில் மறந்துவிட முடியாது.

 உரிமைகள்

உரிமைகள்

தற்போது புதிய அமைச்சரவை உருவாகி இருந்தாலும்கூட, பெண்களுக்கு அவரது உரிமைகளை அளிப்போம் என்றெல்லாம் தாலிபான்கள் வாக்குறுதி தந்திருந்தாலும்கூட, அதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை.. சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் போன்ற முக்கிய துறைகளை நிர்வகிக்கும் அதிகாரிகள், கடந்த மாதமே தேர்ந்தெடுக்கப்பட்டு நிலையில், சில அதிரடி அறிவிப்புகளையும் அந்த நாட்டு அரசு பிறப்பித்து வந்தது. அந்த வகையில் 2 அறிவிப்புகள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது... அந்த 2 அறிவிப்புகளுமே பெண்களுக்கு எதிரான அறிவிப்புகள் ஆகும்.

 பாதுகாப்பு படை

பாதுகாப்பு படை

பெண்கள் வேலைக்காக வீட்டுக்கு வெளியே செல்லக் கூடாது என்றும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதே அவர்களுக்குப் பாதுகாப்பானது என்றும் தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித் தெரிவித்திருந்தார்.. தாலிபான் பாதுகாப்பு படையினருக்குப் பொது இடங்களில் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதற்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் அப்போது கூறியிருந்தார்.

  US Military Plane-ல் ஊஞ்சல் கட்டி ஆடும் தாலிபான் | Oneindia Tamil
  பொறுப்பு

  பொறுப்பு

  அடுத்ததாக, பல்கலைக்கழகங்களில் ஆண்கள், பெண்கள் இருபாலரும் ஒன்றாக படிக்க தாலிபான்கள் தடை விதித்துள்ளதாகவும், இஸ்லாமிய சட்டப்படி மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனி வகுப்புகளில்தான் பாடம் நடத்தப்படும் என்றும் ஆப்கனின் கல்வித்துறையை தன் பொறுப்பில் கவனித்து வரும் சியார் கான் யாத் தெரிவித்திருந்தார்.

   நிகழ்ச்சி

  நிகழ்ச்சி

  அதேபோல, கந்தஹாரில், டிவி மற்றும் ரேடியோவில் இசை நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியாம்.. அதனாலேயே தடை விதிக்கப்பட்டுவிட்டதாக கூறி கண்டனங்களும் எழுந்தன. இப்போது இதை உறுதிப்படுத்தும் வகையில் இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது..

  ஆண்கள்

  ஆண்கள்

  அதன்படி, பல்கலைக்கழகங்களில் பெண்கள் மேற்படிப்பு படிக்க தடை எதுவும் இல்லை, ஆனால் ஆண்களுடன் சேர்ந்து படிக்க பெண்களுக்கு அனுமதி இல்லை என்று தலிபான் அரசின் உயர் கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் பாகி ஹக்கானி தெரிவித்துள்ளார்... இஸ்லாமிய பாரம்பரிய உடையை பெண்கள் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் தலையில் இருந்து கால் வரை மறைக்கும் இஸ்லாமிய பாரம்பரிய உடைகளை பெண்கள் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்..

   ஆடை கட்டுப்பாடு

  ஆடை கட்டுப்பாடு

  இதுவரை, ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்கள் ஆண்களும் பெண்களும் ஒன்றாக சேர்ந்து படிப்பவையாக இருந்தன... அருகருகில் ஆண்களும் பெண்களும் இருந்தாலுமேகூட, ஆடைக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இதுநாள் வரை இல்லாதிருந்தது.. இப்போது புதுபுது கட்டுப்பாடுகள் அந்நாட்டு பெண்களை மேலும் கலங்கடித்து வருகின்றன.

   ஆடை

  ஆடை

  தாலிபன் செய்தி தொடர்பாளர்கள் சிலர் சில தினங்களுக்கு முன்பு ஒரு பேட்டியை தந்திருந்தனர்.. அதில், "ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு புர்கா கட்டாயமாக்கப்படாது... ஆனால் அதேசமயம், புர்காவிற்கு பதிலாக ஹிஜாப் அணிந்து கொள்ளலாம் அல்லது அபாயா அணிந்து கொள்ளலாம்" என்று கூறியிருந்தனர்..

  அறிவிப்பு

  அறிவிப்பு

  அதாவது தலை முதல் கால் வரை மறைக்கும் உடை புர்கா எனப்படும்.. தலையில் முடி, முகத்தை மறைத்துக்கெள்வது ஹிஜாப் எனப்படும்... தலைமுதல் கால்வரை மறைப்பது அபாயா எனப்படும்.. இதில் முகத்தை மட்டும் மறைக்காமல் வைத்திருக்கும்.. இதை ஏதாவது ஒன்றை மட்டும் அணிந்தால் போதும் என்று தாலிபான்கள் கூறியிருந்த நிலையில், இதுகுறித்து உறுதியான அறிவிப்பும் விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  English summary
  Taliban: Curtains separate male and female Afghan students as new term begins under Taliban rule
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X