For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் வேட்பாளர் நந்தன் நிலகேனியா? காங்கிரஸ் மறுப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Talk of Nandan Nilekani being made PM candidate 'hypothetical': Congress
டெல்லி: லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நந்தன் நிலகேனி நிறுத்தப்படுவார் என்று வெளியான தகவல்களை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

4 மாநில சட்டசபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து கட்சியின் அடுத்த பிரதமர் வேட்பாளர் குறித்து காங்கிரஸ் தீவிர பரிசீலனை செய்து வருகிறது. இந்த நிலையில், ஆதார் அடையாள அட்டை ஆணைய தலைவரும், இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவருமான நந்தன் நிலகேனியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து காங்கிரஸ் பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகி இருந்தது.

ஆனால் இந்த தகவலை முற்றிலும் மறுத்த மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், இது முற்றிலும் அபத்தமான வதந்தி. காங்கிரசில் ஏராளமான தலைவர்கள் உள்ளனர். அவரும் எங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார் என்று கூறினார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சந்தீப் தீட்சித் கூறும்போது, தற்போதைய நிலையில் மன்மோகன்சிங்தான் பிரதமர் என்றார்.

English summary
Congress dismissed as "hypothetical" talk of Nandan Nilekani being made the PM candidate, maintaining that it was for the high command to choose Rahul Gandhi or any other leader.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X