For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊழல் செய்ததாக பேச்சு.! அகமதாபாத் கூட்டுறவு வங்கி தொடர்ந்த அவதூறு வழக்கு.. ராகுலுக்கு ஜாமின்

Google Oneindia Tamil News

அகமதாபாத்: அகமதாபாத் கூட்டுறவு வங்கி தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று ஆஜரான ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கி அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய ராகுல் காந்தி, குஜராத்திலுள்ள அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் இயக்குனர் குழுவில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் உள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டது 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Talk of corruption.! Ahmedabad co-operative bank has filed a defamation case bail for rahul gandhi

கால்கடுக்க வரிசையில் நின்று பொது மக்கள் தங்களிடம் உள்ள, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றினர். நபர் ஒருவர் இவ்வளவு பழைய ரூபாய் நோட்டுகளை தான் நாளொன்றுக்கு மாற்ற முடியும் என்ற விதிமுறையெல்லாம் புகுத்தப்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் அமித் ஷா இயக்குனராக உள்ள, அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில், ஐந்தே நாட்களில் ரூ.750 கோடி மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள், டெபாசிட் செய்யப்பட்டது என ராகுல் குற்றம்சாட்டி பேசினார்.

இது மிக பெரியஊழல் என்றும் ராகுல் கூறி இருந்தார். ராகுலின் இந்த பேச்சு குறித்து அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் அஜய் படேல், அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் இன்று நேரில் ஆஜராக விமானம் மூலம் இன்று காலை அகமதாபாத் வந்தார் ராகுல்.

அடடே! காஞ்சி அத்திவரதரைப் போலவே இருக்கிறாரே தாய்லாந்து சயனநிலை புத்தர்- வைரலாகும் படம் அடடே! காஞ்சி அத்திவரதரைப் போலவே இருக்கிறாரே தாய்லாந்து சயனநிலை புத்தர்- வைரலாகும் படம்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் சித்தாந்த ரீதியாக மக்களுக்காக போராட வாய்ப்பளித்த ஆர்எஸ்எஸ், பாஜக இயக்கங்களுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார் மேலும் அடுத்தடுத்து என் மீது அவதூறு வழக்குகளை தொடுக்க எனது அரசியல் எதிரிகள் தயாராக இருக்கிறார்கள் என்றார்.

இன்று மதியம் அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரானார். பின்னர் ராகுல் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று அவருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

English summary
The Ahmedabad Metropolitan Magistrate's Court today granted bail to Rahul Gandhi in a defamation case filed by Ahmedabad Cooperative Bank.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X