For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக அவலம், அரசியல் நிலவரம் குறித்து சோனியாவுடன் ஆலோசனை: கமல்ஹாசன்

தமிழ்நாட்டில் நிலவும் அவலம் குறித்தும் , அரசியல் பிரச்சனை குறித்தும் சோனியாவிடம் பேசியதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக பிரச்சினைகளை சோனியாவிடம் விவாதித்த கமல்- வீடியோ

    டெல்லி: தமிழ்நாட்டில் நிலவும் அவலம் குறித்தும் , அரசியல் பிரச்சனை குறித்தும் சோனியாவிடம் பேசியதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் பதிவிற்காக டெல்லி சென்றுள்ளார். நேற்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார்.இதில் பல முக்கிய விஷயங்கள் குறித்து அவர் பேசினார்.

    Talked about various political issues of Tamilnadu says Kamal after his meet with Sonia

    இன்று கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். அவரது உடல்நிலை குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்க இருக்கிறார்.சோனியாவை சந்தித்த பின் கமல் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.

    அதில் அவர் அளித்த பேட்டியில், நேற்று ராகுல்காந்தியை சந்தித்து பேசியதை தொடர்ந்து இன்று சோனியா காந்தியை சந்தித்து பேசினேன், மரியாதை நிமித்தமாக சோனியாவை சந்தித்தேன். தமிழக அரசியல் சூழல், அவலம் குறித்து பேசினேன்.

    ஜனநாயகத்துக்கு ஆபத்து நிலவும் சூழ்நிலை குறித்து பேசினேன்.தேர்தல் குறித்து இப்போது பேசவில்லை. அதுகுறித்தெல்லாம் பின்னர் ஒருவேளை பேசலாம். தமிழகத்தில் போராட்டம் செய்தால் சமூக ஆர்வலர் மட்டுமின்றி வழக்கறிஞரையும் கைது செய்வதா.? என்று தூத்துக்குடி, சேலம் கைதுகள் குறித்து பேசினார்.

    English summary
    Talked about various political issues of Tamilnadu says Kamal after his meet with Sonia Gandhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X