For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லை பெரியாறு அணையில் ஆய்வு நடத்த தமிழக அரசை அனுமதிக்க முடியாது... சுப்ரீம் கோர்ட்டில் கேரளா மனு!

முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு நடத்த தமிழக அரசை அனுமதிக்க முடியாது என சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு நடத்தவோ, பாராமரிக்கவோ தமிழக அரசை அனுமதிக்க முடியாது என சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கேரளா அரசு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

Tamil Nadu government could not be allowed to conduct study or maintenance work in the the Mullaipperiyar dam : Kerala

அந்த மனுவில், முல்லை பெயாறு அணை பகுதியில் ஆய்வு செய்ய தமிழகத்தை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. முல்லை பெரியாறு அணையை பராமரிக்கும் பணியை தமிழக அரசு மேற்கொள்ளக் கூடாது என்றும் கேரள அரசு தனது மனுவில் கூறியுள்ளது.

வல்லக்கடவு - முல்லை பெரியாறு சாலையில் பொருட்களை ஏற்றிச் செல்ல தமிழக வாகனங்களை அனுமதிக்க முடியாது என்றும் கேரள அரசு கூறியுள்ளது. அணையை பராமரிக்க உரிமை கோரும் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேரள அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

English summary
The Kerala government has filed a reply in Supreme court, saying that the Tamil Nadu government could not be allowed to conduct study or maintenance work in the the Mullaipperiyar dam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X