For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒருபக்கம் காவிரிக்காக தமிழர்கள் மீது தாக்குதல்.. மறுபக்கம் சத்தமேயின்றி பெங்களூர் மேயரான தமிழ் பெண்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியின் மேயர் பதவிக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில், நகரின் மதிப்புமிக்க 50வது மேயராக தமிழ் பெண்மணியான பத்மாவதி நேற்று தேர்வு செய்யப்பட்டார். காவிரி பிரச்சினையால் பெங்களூர் பற்றி எரிந்து கொண்டுள்ள சூழ்நிலையில், மற்றொருபக்கம் சத்தமின்றி தமிழ் பெண்மணி மேயராகி அசத்தியுள்ளார்.

2015-16ம் பருவம் மேயராக இருந்த மஞ்சுநாத்ரெட்டி பதவிக்காலம் செப்டம்பர் 10ம் தேதியுடன் முடிவடைந்தது. மேயர் தேர்தல் வாக்காளர் பட்டியல் தாமதம் ஆனதை தொடர்ந்து செப்.28ம் தேதிக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று தேர்தல் நடைபெற்றது.

காங்கிரஸ்-தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் இணைந்து தேர்தலை சந்தித்ததால் பாஜகவால் மேயர் பதவியை பிடிக்க முடியவில்லை. காங்கிரஸ் சார்பில் பத்மாவதியும், பாஜக சார்பில் லட்சுமியும் மேயர் போட்டியில் குதித்தனர்.

மேயர் தேர்தல்

மேயர் தேர்தல்

மாநகராட்சி மாமன்ற அரங்கில் நேற்று தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அதிகாரி ஜெயந்தி, மேயர் தேர்தலில் காங்கிரஸ் கவுன்சிலர் ஜி.பத்மாவதிக்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினர்கள் கைகளை உயர்த்துமாறு தெரிவித்தார். அப்போது அவையில் இருந்த வாக்களிக்க உரிமை பெற்ற உறுப்பினர்கள் (பெங்களூரை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரும்) 142 பேர் ஆதரவு தெரிவித்தனர்.

பாஜக வேட்பாளர் தோல்வி

பாஜக வேட்பாளர் தோல்வி

பாஜ வேட்பாளர் லட்சுமிக்கு ஆதரவாக மொத்தம் 120 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதையடுத்து புதியதாக தேர்வு செய்யப்பட்ட மேயர் பத்மாவதிக்கு கவுன்சிலர்கள், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

மூன்று முறை கவுன்சிலர்

மூன்று முறை கவுன்சிலர்

பெங்களூரு மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜி.பத்மாவதி பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மெஜஸ்டிக் அடுத்த ஸ்ரீராமபுரம் ஏரியாவின், பிரகாஷ்நகர் வார்டில் இருந்து கவுன்சிலராக வெற்றி பெற்றவர். இதற்கு முன்பு மூன்று முறை கவுன்சிலராக பணியாற்றியுள்ளார்.

தமிழ் பெண்

தமிழ் பெண்

பத்மாவதியின் முன்னோர்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், அவர் பெங்களூருவில் பிறந்தவர். பெங்களூரு தமிழ்ச்சங்கத்துடன் நல்ல தொடர்பில் உள்ளார். இவருக்கு ஜெயபால் என்ற கணவரும், சந்தோஷ், சந்தீப் மற்றும் சுனில் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். பெங்களூரில் மேயர் பதவிகாலம் ஓராண்டு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bengaluru is keenly looking forward to the appointment of its new mayor, who they hope, will help improve city's infrastructure including its bad roads and infamous lakes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X