For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் உடல் கண்டெடுப்பு

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் உடல் மீட்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

காஷ்மீர்: காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் உடல் மீட்கப்பட்டு இருக்கிறது. பனிச்சரிவில் சிக்கி இறந்து போன இன்னும் 4 பேரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

வடக்கு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டுக் பகுதி அருகில் முன்னரங்க நிலை ஒன்றில் மூன்று ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீர் என்று பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு இருந்த 3 வீரர்களும் சிக்கினர்.

Tamilnadu army men body found who dead in heavy snowfall in Kashmir

அதே நாளில் குப்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் மேலும் இரண்டு வீரர்கள் சிக்கினர். இந்த சம்பவம் டிசம்பர் 13ல் காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த போது நடந்துள்ளது.

இந்த 5 ராணுவ வீரர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த என். மூர்த்தி என தெரியவந்தது. இவர் 36-வது ராஷ்டிரிய ரைபிள் படையணியைச் சேர்ந்தவர். இந்த தேடுதல் பணி கடந்த ஒருவாரமாக நீடிந்தது.

தற்போது காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் என். மூர்த்தியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. மீட்கப்பட்ட ராணுவ வீரர் மூர்த்தியின் குடும்பத்திடம் ராணுவ தரப்பு இதற்கான தகவலை தெரிவித்து இருக்கிறது.

English summary
The Search operations continued for the one week to rescue five soldiers, who went missing after heavy snowfall near Line of Control in north Kashmir. Military has found the body of Army man Moorthi, who is from Tamil Nadu. Search is still going on to find other 4 army men bodies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X