For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யூ டியூப் பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் 3-வது இடம்.. என்ன பார்க்கிறார்கள் தெரியுமா?

யூ டியூப் பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் 3-வது இடம் பிடித்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    You Tube பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் 3-வது இடம்- வீடியோ

    டெல்லி: யூ டியூப் பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் 3-வது இடம் பிடித்து இருக்கிறது. நாளுக்கு நாள் இண்டர்நெட் பயன்பாடு தமிழர்கள் இடையே அதிகமாகிக் கொண்டே வருகிறது.

    இந்தியர்களின் யூ டியூப் பயன்பாடு குறைவாக இருந்த போதே, நாம் கொலவெறி போட்டு தெறி ஹிட் கொடுத்தோம். அப்போது தொடங்கிய யூ டியூப் பீவர் இப்போதும் தொடர்ந்து வருகிறது.

    உலகிலேயே மூன்றாவது இடத்தில் இருப்பது பெரிய விஷயம் ஆகும். நம் மக்களின் மொபைல் பயன்பாடு இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

    இந்திய சிஇஓ சத்ய நாராயணா பேட்டி

    இந்திய சிஇஓ சத்ய நாராயணா பேட்டி

    யூ டியூப் ஆப் பயன்பாடு குறித்து யூ டியூப் நிறுவனத்தின் இந்திய சிஇஓ சத்ய நாராயணா பேட்டி அளித்து இருக்கிறார். உலகிலேயே தமிழர்கள் அதிகம் யூ டியூப் பயன்படுத்துகிறார்கள் என்றுள்ளார். நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

    சமையல்

    சமையல்

    தமிழர்கள் சமையல், பாடல், காமெடி வீடியோக்கள் அதிகம் பார்ப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் தமிழர்கள் அப்லோட் ஐயும் வீடியோக்கள் அதிகம் வைரல் ஆவதாக கூறியுள்ளார். தமிழில் நிறைய காமெடி சேனல்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    டிரெண்ட்

    டிரெண்ட்

    தமிழர்களின் கிராமிய சமையல் குறித்த வீடியோக்கள் உலகளவில் பிரபலமாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழ் நாட்டில் அப்லோட் செய்யப்படும் படங்களில் டிரைலர்கள் உலக அளவில் வைரல் ஆவது குறிப்பிடத்தக்கது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இப்போது யூ டியூப் சேனல் ஆரம்பிப்பது ஒரு டிரெண்ட் அதுவும் இதற்கு முக்கிய காரணம் ஆகும். அதேபோல் ஜியோ வந்தபின் மொபைல் பயன்பாடு அதிகம் ஆகி இருக்கிறது. இலவச லேப்டாப், மக்களின் அதீத அறிவு தேடல், தொழில்நுட்பம் சார்ந்த விழிப்புணர்வு, எல்லாமே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

    English summary
    Tamilnadu gets No.3 in You Tube user traffic all over the world. You Tube India's CEO Sathya Narayana reveals this information.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X