For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது தமிழக அரசு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

காவிரி விவகாரத்தில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அப்போது 6 வார காலத்துக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உத்தரவிட்டது.

இந்த 6 வார கால கெடு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. ஆனால் இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழக அதிகாரிகள்

தமிழக அதிகாரிகள்

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் என தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து தமிழக பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் நேற்று டெல்லி சென்றனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பிரபாகர், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியும் டெல்லி சென்றனர். இந்நிலையில் மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

தமிழக அரசு கோரிக்கை

தமிழக அரசு கோரிக்கை

உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய நீர்வளத்துறை, அமைச்சரவை செயலாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.

வழக்கறிஞர் கோரிக்கை

வழக்கறிஞர் கோரிக்கை

தமிழக அரசின் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் வரும் திங்கள் கிழமை தமிழக அரசின் மனுவை விரைந்து விசாரிக்குமாறு தமிழக அரசின் வழக்கறிஞர் கோரவுள்ளார்.

English summary
Tamilnadu govt going to file contempt of court case against Central govt on Cauvery issue. Tamil Nadu PWD higher officials left to delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X