For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரியில் கழிவுநீர் விவகாரம்!! தமிழகத்தின் வழக்கு அரசியல் உள்நோக்கம் என்கிறார் சித்தராமையா!!!:

Google Oneindia Tamil News

மைசூரு: காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மைசூருவில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் சித்தராமையா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், காவிரி ஆற்றில் பெங்களூருவில் சேரும் கழிவுநீர் கலரப்பதைத் தடுக்க தடுக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறும் கோரி உச்சநீமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்து சித்தராமையா கூறியதாவது...

காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கை தமிழக அரசு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்.

இந்த விவகாரத்தில் கர்நாடகத்தின் நலன் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

English summary
Tamilnadu Govt's petition against drainage matter is political intentional- says Siddharamaya in Mysuru
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X