For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆங்கிலத்தோடு இந்தியையும் கலந்து பட்ஜெட் வாசித்த ஜேட்லி.. எதிர்ப்பே தெரிவிக்காத தமிழக எம்.பிக்கள்!

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். ஆனால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மத்திய பட்ஜெட் 2018-19, வருமான வரிக்கான உச்ச வரம்பில் மாற்றம் இல்லை..வீடியோ

    டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பட்ஜெட் தாக்கல் செய்தார். முக்கியமான விஷயங்களை அவர் ஹிந்தியில் குறிப்பிட்டார்.

    அதன் மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில் அவ்வப்போது குறிப்பிட்டார். ஆனால் முழுக்க முழுக்க அவர் ஆங்கிலத்தில் பேசவில்லை. ஹிந்தியில் பேசிய பேச்சு ஹிந்தி தெரியாதவர்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

    ஜேட்லி ஹிந்தியில் பேசியதற்கு லோக்சபாவில் எதிர்ப்பே இல்லை. குறிப்பாக தமிழக எம்.பிக்கள் யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

    ஆங்கிலத்தில் பேசினார்

    ஆங்கிலத்தில் பேசினார்

    அருண் ஜேட்லி சென்ற வருடம் செய்த பட்ஜெட் தாக்கலை ஆங்கிலத்தில் செய்தார். இந்த முறை ஹிந்தியில் பேசவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த முறையும் அவர் ஆங்கிலத்திலேயே தொடர்ந்தார்.

    ஹிந்தி திணிப்பு

    ஹிந்தி திணிப்பு

    ஆனால் பல இடங்களில் அவர் ஹிந்தியில் பேசினார். சில முக்கிய அறிவிப்புகளை அவர் ஹிந்தியில் குறிப்பிட்டார். அதைக்குறித்து அவ்வப்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

    விவசாயிகள்

    விவசாயிகள்

    முக்கியமாக விவசாயம் குறித்த அறிவிப்புகளை அவர் ஹிந்தியில் குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு புரிய வேண்டும் என்பதற்காக இப்படி பேசினார். அதேபோல் கிராமப்புற திட்டங்களுக்கு ஹிந்தியில் பேசினார்.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    இதற்கு தமிழக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தனர். முக்கியமாக இந்த அறிவிப்புக்கள் எதுவும் தமிழக விவசாயிகளுக்கு புரியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்பாக நடக்கும் விவாதத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்புவார்களா என்று பார்க்க வேண்டும்.

    English summary
    Finance minister Arun Jaitley will present the Union Budget 2018 in Parliament on Thursday, with investors expecting increased spending and a reduction in tax slabs. In his budget speech, Jaitley is expected to address agriculture distress, unemployment and ways to boost growth in the Indian economy while sticking to fiscal prudence.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X