For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூய்மை இந்தியா நகரப் பட்டியலில் பின்னுக்குப் போனது திருச்சி நகரம்!

நாட்டின் தூய்மை நகரங்கள் பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதில் திருச்சி 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி : தூய்மை நகரப் பட்டியலில் மத்திய பிரதேசத்தின் இரண்டு நகரங்கள் முதல் 2 இடங்களைப் பெற்றுள்ளன. தமிழகத்தின் திருச்சி 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜனதா அரசு செயல்படுத்திய முக்கிய திட்டங்களில், தூய்மை இந்தியா திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இதை விளம்பரப்படுத்த அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை தூதர்களாகவும் நியமித்தார். மத்திய அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டம், மாநில அரசுகளால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள தூய்மையான நகரங்கள் குறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு நடத்தி, தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 500 நகரங்களில் ஆய்வின் படி தயாரிக்கப்பட்ட தூய்மையான நகரங்கள் பட்டியலை, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று வெளியிட்டார்.

 73 நகரங்கள்...

73 நகரங்கள்...

ஸ்வச் சர்வக்ஷன் 2017 ஆய்வில் சுமார் 37 லட்சம் பேர் பங்கு பெற்றதகா அமைச்சர் கூறினார். கடந்த வருடம் வெளியிடப்பட்ட பட்டியலில் 73 நகரங்கள் இடம்பெற்றது, சுமார் ஒரு லட்சம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது.

 ம.பி முதலிடம்

ம.பி முதலிடம்

ம.பி முதலிடம்

 பின்னேறிய திருச்சி

பின்னேறிய திருச்சி

கடந்த ஆண்டு தூய்மை நகரப் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த திருச்சி மாநகராட்சி இந்த ஆண்டு பின்னுக்கு தள்ளப்பட்டு 6வது இடத்தில் உள்ளது. சென்னை 235வது இடத்தை பிடித்துள்ளது. சென்னையின் தாம்பரம் நகராட்சி 62வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிட்டத்து. தூய்மையான முதல் 50 நகரங்கள பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 4 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

 உ.பி மிக மோசம்

உ.பி மிக மோசம்

உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டம் தரவரிசையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. தூய்மைக்கான முக்கியத்துவத்தை அதிகரிப்பதற்காக நகரங்கள் மத்தியில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும் வகையிலும், சுகாதாரம் மற்றும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து நகரை சுகாதார சீர்கேடு பாதிப்பில் இருந்து மீட்கும் முயற்சியாக இந்த தூய்மை நகரங்கள் திட்டம் நடத்தப்படுகிறது.

English summary
Tamilnadu's trichy corporation ranks back in cleanest cities list released by central minister venkaiah naidu today at newdelhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X