For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுழற்றி அடித்த பேய்க்காற்று.. குலை நடுங்கிய கொல்கத்தாவாசிகள்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொல்கத்தாவில் ஆம்பன் புயலால் சூறாவளி காற்று வீசியது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தாவை ஒரு புரட்டு புரட்டி எடுத்த ஆம்பன் புயல், அப்போது விட்டு சென்ற பேரழிவை கொல்கத்தாவில் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆம்பன் புயல் கரையை கடந்த போது மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

அதிலும் டம்டம் விமான நிலையத்தில் காற்று வீசி மழை பெய்ததால் அந்த இடமே தண்ணீரில் மிதந்தது. கடந்த 100 ஆண்டுகளில் இது போன்ற ஒரு காற்றையும் சேதத்தையும் சந்தித்ததே இல்லை என்கிறார்கள்.

விவசாயத்தை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் - முன்பே எச்சரித்த தமிழ் பஞ்சாங்கம்விவசாயத்தை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் - முன்பே எச்சரித்த தமிழ் பஞ்சாங்கம்

கொல்கத்தா

கொல்கத்தா

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆம்பன் புயல் கொல்கத்தாவை புரட்டி போட்டுள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. கொல்கத்தாவின் மிக முக்கியமான விமான நிலையத்தில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக பதிவாகியுள்ளது. 100 ஆண்டுகளில் இதுபோன்ற காற்றை இந்த விமான நிலையம் சந்தித்தே இல்லை.

பெருத்த சேதம்

பெருத்த சேதம்

கடந்த 2009 ஆம் ஆண்டு கொல்கத்தாவை ஐலா புயல் நெருங்கியது. அது ஆம்பனை விட 30 சதவீதம் வலுவிழந்தது. இதனால் பெருத்த சேதம் ஏதும் இல்லை. ஆம்பன் விவகாரத்தில் புயலின் கண் சரியாக கொல்கத்தா நகரை கடந்தது. கொல்கத்தாவில் புயல் மூலம் அதிகபட்சமாக வீசிய காற்று, சூறாவளிகள் குறித்து பார்ப்போம்.

இதுவரை கொல்கத்தாவில் ஏற்பட்ட புயல் காற்று

இதுவரை கொல்கத்தாவில் ஏற்பட்ட புயல் காற்று

இதுவரை கொல்கத்தாவில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தை தாண்டிய வீசிய புயல்காற்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • ஆம்பன் புயல் (2020)- டம்டம் மணிக்கு 130 கி.மீ., அலிபோர் மணிக்கு 112 கி.மீ.
  • ஐலா புயல் (2009)- பாராக்பூர் மணிக்கு 112 கி.மீ. அலிபோர் 95 கி.மீ., டம்டம் 70 கி.மீ.
  • 1971 செப்டம்பர் புயல்- டம்டம் மணிக்கு 93 கி.மீ.
  • 1937 செப்டம்ர் புயல்- அலிபோர் மணிக்கு 93 கி.மீ.
  • 1896 ஜூன் புயல்- அலிபோர் 83 கி.மீ.
  • 1988 அக்டோபர் புயல்- டம்டம் 80 கி.மீ.
  • 1974 ஆகஸ்ட் புயல்- டம்டம் 74 கி.மீ.
  • 2002 மேற்கு வங்க புயல்- டம்டம் மணிக்கு 74 கி.மீ.
  • 1916- செப்டம்பர் புயல்- அலிபோர் 74 கி.மீ.
  • 1932- மே புயல்- அலிபோர் 74 கி.மீ.
  • 1936 மே புயல்- அலிபோர் 74 கி.மீ.
  • 1940 ஜூன் புயல்- அலிபோர் 74 கி.மீ
  • 1888 ஆகஸ்ட் புயல்- அலிபோர் 68 கி.மீ.
  • 1901 நவம்பர் புயல்- அலிபோர் 65 கி.மீ.
  • 1889 ஆகஸ்ட் புயல்- அலிபோர் 63 கி.மீ.
  • 1962 செப்டம்பர் புயல்- அலிபோர் 60 கி.மீ.
  • புயல் புல்புல் (2019)- அலிபோர் 60 கி.மீ.
  • என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வெயில்

வெயில்

கொல்கத்தாவில் இதுபோன்றதொரு மழையையும் புயல் காற்றையும் அனைத்து தலைமுறையினரும் தற்போது தான் பார்க்கின்றனர். அந்த அளவுக்கு ஆக்ரோஷமாக இருந்தது ஆம்பன். கோடிக்கணக்கில் சேதத்தை ஏற்படுத்திச் சென்ற இந்த புயல், தமிழகத்திற்கு கடும் வெயிலையும் கொடுத்துவிட்டு சென்றது.

English summary
Tamilnadu Weatherman Pradeep John says that Cyclone Amphan wind speeds in Kolkatta was the highest in last 150 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X