For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்துக்கு ஒடிஷாவில் ஒரு நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கியது மத்திய அரசு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ஒடிஷாவில் ஒரு நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அனல் மின்நிலையங்களின் பங்கு 35% உள்ளது. தற்போது மத்திய அரசு அனுமதியின்கீழ் ஒடிஷாவில் உள்ள டால்ச்சர், ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் ஆகிய நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை வாங்கி வருகிறது.

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் பெரும் முறைகேடு நடந்ததாகக் கூறி 200-க்கும் மேற்பட்ட, தனியார் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஆணைகளை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ரத்து செய்தது.

Tangedco will get one coal mine

அதைத் தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு, ஜார்க்கண்ட், ஒடிஸா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 43 நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்தது.

இந்த ஏலத்தில் தமிழக மின்வாரியம், ஒடிஷாவில் உள்ள மகாநதி-மச்சகட்டா மற்றும் கரே பால்மா (2-வது செக்டர்) ஆகிய இரு நிலக்கரி சுரங்கங்களைக் கோரி மனு செய்துள்ளது.

இதனை இறுதி செய்வது தொடர்பாக டெல்லியில் மத்திய நிலக்கரித் துறை ஒரு முக்கிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. அதன் முடிவில் தமிழகத்துக்கு ஒரு நிலக்கரிச் சுரங்கம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

English summary
The Union coal Ministry decided to allocate one Coal mine in Odisha to Tamil Nadu Distribution and Generation Company (Tangedco).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X