For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாதாளத்திற்கு சென்ற உற்பத்தி.. நானோ காரின் கதை முடிந்ததா?

நானோ காரின் உற்பத்தி ஒருநாளைக்கு இரண்டு என்ற அளவுக்கு மிகவும் அதிகமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பாதாளத்திற்கு சென்ற உற்பத்தி.. நானோ காரின் கதை முடிந்ததா? - வீடியோ

    டெல்லி: நானோ காரின் உற்பத்தி படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது அந்த நிறுவனம் ஒருநாளைக்கு மொத்தமாக இரண்டு கார்களை மட்டுமே தயாரிப்பதாக தெரிவித்துள்ளது.

    உற்பத்தி மட்டும் இல்லாமல் விற்பனையும் பல இடங்களில் குறைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. முக்கியமாக கடந்த மூன்று மாதங்களில் மட்டும் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது.

    இதையடுத்து நானோ உற்பத்தி இன்னும் சில வருடங்களில் மொத்தமாக நிறுத்த வாய்ய்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    விலை குறைந்த கார்

    விலை குறைந்த கார்

    உலகிலேயே மிகவும் விலை குறைவான கார் என்ற பெயருடன் டாடா நிறுவனம் வெளியிட்ட கார் தான் 'நானோ'. இந்த கார் வருவதற்கு முன்பே உலகம் முழுக்க வைரல் ஆனது. இதன் அறிமுக விழாவே மிகவும் பெரிய அளவில் நடத்தப்பட்டது. இதன் ஒரு லட்ச ரூபாய் என்ற விலை பல நடுத்தர குடும்பங்களை கவர்ந்தது. 2009ல் வந்த அதிரடியாக வந்த காருக்கு வெறும் எட்டே வருடத்தில் ஆயுள் முடிய இருக்கிறது.

    கார் விற்பனை குறைந்தது

    கார் விற்பனை குறைந்தது

    தொடக்கத்தில் இந்த காரின் விற்பனை மிகவும் அதிகமாவே இருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக விற்பனை குறைந்துள்ளது. கார் வெளியான தொடங்க காலத்தில் ஒவ்வொரு மாதமும் 1200க்கும் அதிகமான கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த ஒரு வருடத்தில் மட்டும் காரின் விற்பனை மொத்தமாக சரிந்து இருக்கிறது. அதன்படி கடந்த மூன்று மாதங்களில் வெறும் 180 கார்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளது. 1500 கார்களாவது விற்கப்படும் என்ற இலக்கை கூட நானோவால் எட்ட முடியவில்லை.

    உற்பத்தி குறைந்தது

    உற்பத்தி குறைந்தது

    இந்த நிலையில் டாடா நிறுவனம் நானோ காரின் உற்பத்தியையும் குறித்துள்ளது. அதன்படி முதல் வருடம் முதல் மாதத்தில் 5380 கார்களை உற்பத்தி செய்தது. பின் 3000 கார்களை எல்லா மாதமும் சரியாக உற்பத்தி செய்தது. ஆனால் தற்போது ஒரு நாளைக்கு இரண்டு கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்படி ஒரு மாதத்திற்கு 60 கார்கள் கூட உற்பத்தி செய்யப்படுவதில்லை.

    உற்பத்தி நிறுத்தப்படுகிறது

    உற்பத்தி நிறுத்தப்படுகிறது

    இந்த நிலையில் டாடா நிறுவனம் கோவையில் இருக்கும் 'ஜெயாம் ஆட்டோமோட்டிவ்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து விலை குறைந்த புதிய கார் ஒன்றை வெளியிட உள்ளது. நானோ கார் போலவே இருக்கும் இந்த கார் பேட்டரி மூலம் இயங்க கூடியது. இதற்கு 'நியோ' என பெயரிடப்பட இருக்கிறது. இதன் காரணமாக நானோ காரின் உற்பத்தி நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 2020ல் கண்டிப்பாக புதிய நானோ கார்கள் எதுவும் தயாரிக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.

    English summary
    TATA Nano is currently struggling in sales. TATA company has decreased the volume of production of Nano car. Officials said that they are producing just 2 Nano car per day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X