For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாடா காரையும் ''கடித்த'' ஜிக்கா கொசு!

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ஜிக்கா வைரஸ் பரவுவதை அடுத்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஜிக்கா காரின் பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜிப்பி காரை அறிமுகம் செய்ய உள்ளது. ஜிப்பி கார் என்பதை சுருக்கி அந்த காருக்கு ஜிக்கா என்று பெயர் வைக்கப்பட்டது. இந்நிலையில் தென் அமெரிக்க நாடுகளில் ஜிக்கா வைரஸ் வேகமாக பரவி வரும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

Tata to rename Zica as virus spreads

ஜிக்கா வைரஸால் மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் தங்களின் ஒரு ரக காருக்கு ஜிக்கா என்ற பெயரை பயன்படுத்துவது சரி அல்ல என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கருதுகிறது. இதனால் அந்த காரின் பெயரை மாற்ற டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

ஜிக்கா கார் கடந்த டிசம்பம் மாதம் மீடியா முன்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. மேலும் இந்த வார இறுதியில் நொய்டாவில் நடக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் ஜிக்கா கார் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவிருந்தது.

ஜிக்கா காரின் பிராண்ட் அம்பாசிடராக பிரபல கால்பந்தாட்ட வீரர் அர்ஜென்டினாவை சேர்ந்த லயனல் மெஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார். தென்னமெரிக்க நாடுகளில் அர்ஜென்டினாவில் தான் முதன்முதலாக ஒருவரை ஜிக்கா வைரஸ் தாக்கியது.

ஜிக்கா காரின் புதிய பெயர் இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. ஹுன்டாய் ஐ10, மாருதி செலிரியோவுக்கு போட்டியாக தயாரிக்கப்பட்டுள்ளது தான் ஜிக்கா கார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tata motors said that it has decided to rename its yet to be launched Zica car as the whole world is worrying about Zika virus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X