For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்- மாநில கட்சிகள் ஆதரவை பெற தெலுங்குதேசம் மும்முரம்!

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு மாநில கட்சிகள் ஆதரவை பெற தீவிரமாக களமிறங்கியுள்ளது தெலுங்குதேசம்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    மீண்டும் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்- தெலுங்கு தேசம் முடிவு- வீடியோ

    ஹைதராபாத்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட மாநில கட்சிகளின் ஆதரவை பெறுவதில் தெலுங்குதேசம் தீவிரமாக களமிறங்கியுள்ளது.

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இந்த கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்குதேசம் கட்சி திட்டமிட்டுள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்ய குறைந்தபட்சம் 50 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.

    TDP seeks parties support for no-trust motion against Centre

    லோக்சபாவில் தெலுங்குதேசம் கட்சிக்கு 16 எம்.பி.க்கள்தான் உள்ளனர். இதனால் பாஜக, காங்கிரஸ் அல்லாத அத்தனை மாநில கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் தெலுங்குதேசம் தீவிரமாக இறங்கியுள்ளது.

    சத்யநாராயணா தலைமையிலான தெலுங்குதேசம் எம்.பிக்கள் குழு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) மூத்த தலைவர் கேசவ் ராவை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு கோரியது. அதேபோல் சி.எம். ரமேஷ் மற்றும் தொட்ட நரசிம்மன் தலைமையிலான எம்.பிக்கள் குழு அதிமுக மற்றும் சிவசேனாவின் ஆதரவை கோர இருக்கின்றன.

    2014 லோக்சபா தேர்தலில் பாஜக மொத்தம் 282 இடங்களில் வென்றது. அடுத்தடுத்த இடைத்தேர்தல்களில் தோல்வியை பாஜக சந்தித்தது. இதனால் அக்கட்சியின் பலம் தற்போது 273 ஆக குறைந்தது.

    லோக்சபாவில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவை 272 எம்.பிக்கள். தற்போது நூலிழையில் பாஜக பெரும்பான்மையுடன் இருக்கிறது.

    அதேநேரத்தில் பாஜக எம்.பிக்கள் சிலர் மத்திய அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். பெரும்பாலான மாநில கட்சிகளும் பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ளன. இந்த நிலையில் தெலுங்குதேசம் கொண்டுவர இருக்கும் நம்பிக்கை இல்லா தீர்மானம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லோக்சபாவில் கட்சிகள் பலம்:

    பாஜக 273
    காங்கிரஸ் 48
    அதிமுக 37
    திரிணாமுல் காங்கிரஸ் 34
    பிஜூ ஜனதா தளம் 20
    சிவசேனா 18
    தெலுங்குதேசம் 16
    தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 11
    சிபிஎம் 9
    சமாஜ்வாதி 7
    தேசியவாத காங்கிரஸ் 7
    லோக் ஜனசக்தி 6
    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 4
    ராஷ்டிரிய ஜனதா தளம் 4
    அகாலி தளம் 4
    ஆம் ஆத்மி 4
    ஏஐயுடிஎப் 3
    சுயேட்சைகள் 3
    ராஷ்டிரிய லோக்சமதா 3
    இந்திய தேசிய லோக் தள் 2
    ஐக்கிய ஜனதா தள் 2
    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 2
    அப்னா தள் 2
    சிபிஐ 1
    தேசியவாத ஜனநாயக முன்னேற்ற கட்சி 1
    மஜ்லிஸ் கட்சி 1
    என்.ஆர். காங்கிரஸ் 1
    கேரளா காங்கிரஸ் (எம்) 1
    தேசிய மாநாட்டு கட்சி 1
    பிடிபி 1
    மதச்சார்பற்ற ஜனதா தளம் 1
    புரட்சிகர சோசலிஸ் கட்சி 1
    சிக்கிம் ஜனநாயக முன்னணி 1
    ராஷ்டிரிய லோக் தள் 1
    தேசிய மக்கள் கட்சி 1
    பாமக 1
    ஸ்வபிமான் பக்ஷா 1

    English summary
    TDP will seek for support from non-BJP and non-Congress parties for its no-trust motion against the the Centre.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X