For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதி இடைத் தேர்தலில் தெலுங்கு தேசம் அமோக வெற்றி - காங்கிரஸ் டெபாசிட் காலி

Google Oneindia Tamil News

திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் தெலுங்கு தேசம் வேட்பாளர் சுகுணா அமோக வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட்டைப் பறி கொடுத்தார்.

திருப்பதி இடைத் தேர்தலில் போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர் சுகுணா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீதேவியை விட 1 லட்சத்து 16 ஆயிரத்து 524 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

TDP wins by 1,16,524 votes, Cong. loses deposit

சுகுணாவுக்கு 1 லட்சத்து 26 ஆயிரத்து 152 வாக்குகள் கிடைத்தன. ஸ்ரீதேவிக்கு வெறும் 9628 வாக்குகளே கிடைத்தன. வெற்றி பெற்ற சுகுணாவின் கணவர் ரமணாவின் கணவர் மரணத்தைத் தொடர்ந்தே இங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

இந்தத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது. காங்கிரஸ் மட்டும் வேட்பாளரை நிறுத்தி கேவலப்பட்டுப் போனது.

மேற்கு வங்கத்தில் மமதா கட்சி வெற்றி

மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணகஞ்ச் சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் திரினமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சத்யஜித் பிஸ்வாஸ் 36,999 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

போனகோவன் லோக்சபா தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலிலும் திரினமூல் காங்கிரஸே முனனிலையில் இருந்து வருகிறது. இத்தொகுதியில் பாஜகவுக்கு 2வது இடமே கிடைத்துள்ளது.

English summary
Telugu Desam Party (TDP) has registered an emphatic win in the by-election conducted to Tirupati Assembly Constituency, by defeating nearest Congress rivals by a whopping margin of 1,16,524 votes. The by-election was caused by the demise of the TDP MLA M.Venkatramana.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X