For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உ.பி. சைக்கிள் சின்ன பஞ்சாயத்தை முன்வைத்து வாதிடப் போகும் சசி அதிமுக!

தேர்தல் ஆணையத்தில் உ.பி. சைக்கிள் சின்ன பஞ்சாயத்தை முன்வைத்து சசிகலா அதிமுக வாதிட திட்டமிட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை நாடே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்றைய தேர்தல் ஆணைய விசாரணையில் உத்தரப்பிரதேசத்தில் சைக்கிள் சின்னம் யாருக்கு என்ற விவகாரத்தில் முடிவெடுத்தது போல இரட்டை இலை சின்ன பிரச்சனைத்தில் தீர்ப்பளிக்க வேண்டும் என சசிகலா அதிமுக வலியுறுத்த உள்ளது.

29 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிமுகவின் இரட்டை இலை யாருக்கு என்ற பஞ்சாயத்து டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெற உள்ளது. இன்றைய விசாரணையில் ஓபிஎஸ் அதிமுக, சசிகலா அதிமுக ஆகிய இருதரப்பும் ஆஜராக உள்ளனர்.

Team Sasikala to urge to follow the Cycle Symbol issue

இன்றைய விசாரணையின் போது சசிகலா அதிமுக முன்வைக்க உள்ள வாதங்கள்:

  • பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நியமன பொதுச்செயலராக நியமித்தனர். அன்று கையெழுத்திட்டவர்கள் சுயநலனுக்காக இன்று பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்க்கின்றனர்.
  • அண்ணா திமுகவில் பிளவு ஏதும் ஏற்படவில்லை. கருத்து வேறுபாடுகள் மட்டும்தான் நிலவுகிறது.
  • இடைக்கால பொதுச்செயலர் நியமிக்கப்பட்ட நிலையில் பொதுக்குழுவைக் கூட்டி முறைப்படி பொதுச்செயலரை தேர்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் உள்ளாட்சி தேர்தல், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அடுத்தடுத்து வந்ததால் பொதுக்குழுவைக் கூட்டி முறைப்படி பொதுச்செயலரை தேர்வு செய்ய முடியவில்லை.
  • உள்ளாட்சி தேர்தலுக்குப் பின்னர் பொதுக்குழுவைக் கூட்டி கட்சி விதிகளின் படி பொதுச்செயலரை தேர்வு செய்வோம்.
  • எங்கள் பக்கமே 122 எம்.எல்.ஏக்கள் 37 எம்.பிக்கள் உள்ளனர்; கட்சியின் 95% நிர்வாகிகள் எங்கள் பக்கமே உள்ளனர்.
  • ஆகையால் அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் சைக்கிள் சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தபோது பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், நிர்வாகிகள் ஆதரிக்கும் அகிலேஷ் யாதவுக்கே சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்ட முன்னுதாரணத்தின் அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு சசிகலா அதிமுக வாதிட உள்ளது.

English summary
The full bench of the Election Commission will conduct a crucial hearing on ADMK's Two Leaves Symbol issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X