For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேய் பிடித்தது போன்ற உணர்வு.. சிறுவனின் ஆன்மா அழைக்கிறது.. கடிதம் எழுதிவைத்து மாணவர் தற்கொலை

Google Oneindia Tamil News

Recommended Video

    சிறுவனின் மரணத்தை நேரில் பார்த்ததால் மனஅழுத்தத்தில் இளைஞர் தற்கொலை- வீடியோ

    நாக்பூர்: ஒரு சிறுவன் சாலை விபத்தில் உயிரிழந்ததை கண்டு மன அழுத்தத்தில் இருந்த பொறியியல் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நாக்பூரை சேர்ந்தவர் சவுரப் நாக்புர்கார் (19). இவர் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், தனது வீட்டில் சகோதரியின் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சடலத்தை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Teen commits suicide over psychological distress after witnessing fatal road accident

    அவர் தற்கொலை செய்து கொண்ட அறையில் போலீஸார் சோதனை நடத்திய போது, ஒரு பக்க கடிதம் சிக்கியது. அதில், தான் கண்ணால் பார்த்த விபத்தில் பலியான சிறுவனின் ஆத்மா தன்னை அழைப்பதாக சவுரப் கூறியுள்ளார்.

    மேலும், தனது பெற்றோர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் எனவும், அவர்களை சகோதரி நல்லபடியாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் சவுரப் குறிப்பிட்டுள்ளார்.

    அந்த விபத்தை கண்ணால் பார்த்ததும் தான் பேய் பிடித்தது போல உணர்ந்ததாகவும் சவுரப் தனது கடிதத்தில் கூறியுள்ளார். இதனை உறுதிப்படுத்த போலீஸார் சவுரப்பின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது, கடந்த மாதம் உம்ரெர் சாலையில் நடந்த விபத்து ஒன்றில் பெண் மற்றும் ஒரு சிறுவன் பலியாகினர். அதனை சவுரப் நேரில் பார்த்தார் என தெரியவந்தது.

    கடந்த மாதம் தனது பிறந்த நாளை ஆதரவற்றோர் இல்லத்தில் வைத்து கொண்டாடிய சவுரப், தனது நண்பர்களும் இதே போல பிறந்த நாளை கொண்டாட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    English summary
    A teenager has allegedly committed suicide after reportedly experiencing psychological distress from witnessing a road accident earlier that killed a minor boy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X