For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உ.பி.-ல் பெற்றோர் கண்முன் சிறுமியை சீரழித்த கொடூரர்கள்... இதற்கு வாய் திறப்பாரா முலாயம் சிங்?

Google Oneindia Tamil News

உத்தரபிரதேசம் : கன்னாஜ் மாவட்டத்தில் பெற்றோர் கண் முன் 15 வயது சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கன்னாஜ் மாவட்டத்தில் தான் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் எம்.பி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். இதே மாவட்டத்தில் தான் இந்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது.

rape

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் தாயார் கூறியதாவது... காலை 11 மணியளவில் எங்கள் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்த 6 பேர், பணம் மற்றும் நகையைக் கேட்டு மிரட்டி எங்களைக் கட்டி வைத்தனர்.

என் மாமியாரையும் என் சின்ன குழந்தையையும் அவர்கள் அடித்து உதைத்தனர். எங்கள் கண்முன்பாகவே எங்களுடைய 15 வயது மகளை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர். அவளை விட்டு விடும்படி கதறிய எங்களின் அழு குரலையோ, என் மகளின் கதறலையோ, அவர்களை கேட்கவில்லை என்று தெரிவித்தார்.

இந்த கொடூரத்தை அரங்கேற்றிய அந்த 6 கொடூர மனித மிருகங்களும் தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த அந்த சிறுமி தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பட்டப்பகலில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்யும் அளவிற்குதான் மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு இருக்கிறதா? என்று பல சமூக ஆர்வலர்கள் இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் கேங் ரேப் என்று கூறுகிறார்கள். ஆனால் 4 பேர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வது நடைமுறையில் அது சாத்தியமில்லை. ஒருவர் பலாத்காரம் செய்தாலும் கூட நான்கு பேரின் பெயர்களை புகாரில் சேர்க்கிறார்கள். நான்கு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்ததாக குறிப்பிடுகிறார்கள். அது எப்படி நடக்க முடியும். இது நடைமுறையில் சாத்தியம் இல்லாதது." என்று ஆளும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் சீரழித்தது குறித்து தற்போது முலாயம் சிங் என்ன சொல்லப்போகிறார் என்று எதிர்கட்சிகள் குரல் எழுப்பியுள்ளன.

English summary
A 15-year-old girl was allegedly gang-raped by six people in front of her parents in Uttar Pradesh's Kannauj district, represented in Parliament by Dimple Yadav, the wife of Chief Minister Akhilesh Yadav.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X